ஓடி வந்த சென்னை, வேலூர், கோவை டாக்டர்கள்
கும்பகோணம்:
கும்பகோணத்தில் இன்று 2வது நாளாக தொடர்ந்து மயான அமைதியும், சோகமும் நிலவி வருகிறது. தீவிரதீக்காயமடைந்துள்ள 19 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிருக்குப் போராடி வரும் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனை, வேலூர் கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனை (சிஎம்சி) ஆகியவற்றைச் சேர்ந்த டாக்டர்கள்கும்பகோணம் விரைந்துள்ளனர்.
அதே போல கோவை போன்ற ஊர்களிலிருந்தும் ஏராளமான டாக்டர்கள் கும்பகோணம் விரைந்துள்ளனர்.
குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க கும்பகோணம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை, டாக்டர்கள்இல்லை. இதனால் தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், தமிழகத்திலேயே தீக்காயங்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கக் கூடிய வசதி சென்னை கீழ்ப்பாக்கம்அரசு மருத்துவனையிலும், வேலூர் சிஎம்சி மருத்துவமனையிலும் மட்டும்தான் உள்ளது. இதனால் அந்தமருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் கும்பகோணம் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இரு ஊர்களிலிருந்தும் வந்துள்ள மருத்துவ நிபுணர்களின் மேற்பார்வையில் உயிருக்குப் போராடி வரும்குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காயம்பட்ட மாணவர்களைப் பார்க்கவும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும் ஏகப்பட்ட பேர்கும்பகோணம் வந்தவண்ணம் உள்ளதால், எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகளாகவும் சோக முகங்களாகவும்காட்சியளிக்கின்றன.
கும்பகோணம் முழுவதும் இன்றும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, கிருஷ்ணா பள்ளியில் படித்து வந்த மாணவ, மாணவியரை வேறு பள்ளிகளில் சேர்க்க மாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications