54 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் பெற்ற பள்ளி
கும்பகோணம்:
தீவிபத்தில் சிக்கி பல உயிர்களைப் பழிவாங்கியுள்ள கும்பகோணம் கிருஷ்ணா உயர்நிலைப்பள்ளி கடந்த 1950ம்ஆண்டு அங்கீகாரம் பெற்ற பள்ளியாகும்.
கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள கிருஷ்ணா உயர் நிலைப்பள்ளி கும்பகோணத்தில் பிரபலமானபள்ளிகளில் ஒன்று. கடந்த 1950ம் ஆண்டு இந்தப் பள்ளிக்கு கல்வித்துறை நிரந்தர அங்கீகாரம் வழங்கியது.
முதலில் 2 மாடிகளுடன் செயல்பட்டு வந்த இப்பள்ளி, பின்னர் சரஸ்வதி நர்சரிப் பள்ளியை தொடங்கியது. ஆனால்நர்சரிப் பள்ளிக்கு நிரந்தரக் கட்டடம் கட்டாமல், மொட்டை மாடிக்கு மேல் கூரையை வேய்ந்து அதில்வகுப்பறைகள் அமைத்துள்ளனர்.
இந்தப் பள்ளிக்கு முறையான அங்கீகாரம் இருந்தாலும் கூட பள்ளிக் கூடத்தில் அடிப்படை வசதிகள் எதுவும்இல்லை என்பது வேதனைக்குரியது. மைதானம் இல்லை, போதிய கழிப்பறை வசதி இல்லை, பள்ளிக் கூடத்திற்குஒரே ஒரு நுழைவாசல்தான், அதுவும்கூட மிகவும் குறுகியது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டால், தகுதிச் சான்றிதழ் பெறப்பட்ட பள்ளிகளில் ஆய்வுகள் நடத்தஎங்களுக்கு அனுமதி இல்லை. இந்தத் தகுதிச் சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அங்கீகாரம் பெற்றபொறியாளர்கள்தான் வழங்குகின்றனர் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
எப்படியோ, ஒட்டுமொத்தமாக பல இளம் பிஞ்சுகளை அழித்து விட்டார்கள்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications