உயிர் தப்பியும் பய பீதியில் குழந்தைகள் !
சென்னை:
கோர தீவிபத்திலிருந்து லேசான காயங்களுடன் உயிர் தப்பிய சில குழந்தைகள் தீயின் கோரத்தை நேரில் பார்த்தஅதிர்ச்சியிலிருந்தும், அதன் பயத்திலிருந்தும் இன்னும் மீள முடியாமல் உறைந்துள்ளனர்.
தீயின் கோர தாண்டவத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர்கள் விஜய் (8 வயது) மற்றும் கெளசல்யா (7வயது). இருவரும் விபத்தில் சிறு காயங்களுடன் தப்பியுள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு மேல் சிகிச்சைஅளிக்கப்பட வேண்டியுள்ளதால், சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இருவரும் உயிர் தப்பினாலும் அவர்கள் மனதில் தீவிபத்தின் பயம் இன்னும் உறைந்துள்ளது. விஜய் எப்போதுபார்த்தாலும் தீ, தீ என்று முனகிக் கொண்டிருக்கிறான். அவனது நிலையைப் பார்த்து தாய் விஜயலட்சுமி கண்களில்தாரை தாரையாக கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்.
இதேபோல கெளசல்யாவும் தீவிபத்தின் பீதியிலிருந்து இன்னும் விடுபடவில்லை. இதில் கொடுமைஎன்னவென்றால் தீவிபத்து ஏற்பட்டபோது, அவளது ஆசிரியை பயப்பட வேண்டாம், சாதாரண தீதான், யாரும்ஓடாதீர்கள் என்று கூறியதைக் கேட்டு இருந்த இடத்திலேயே அமர்ந்திருக்கிறாள் கெளசல்யா. இதனால் காயம்பட்டுஉயிர் பிழைத்துள்ளாள்.
கெளசல்யாவின் இரு சகோதரிகளும் இதே பள்ளியில்தான் படித்து வந்தனர். அவர்கள் இருவரும்தீவிபத்தையடுத்து, ஆசிரியர்கள் தடுத்தும் கேட்காமல் கீழே இறங்கி ஓடி உயிர் தப்பியுள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications