அடிக்கடி அதிகாரிகள் மாற்றம் கூடாது: பிரதமர்
டெல்லி:
நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளை அடிக்கடி இடமாற்றம் செய்வதைத்தவிர்க்குமாறு மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் அதிகாரிகள், அமைச்சர்கள் மாற்றம் என்பது தமிழகத்தில் மிகவாடிக்கையான சாமாச்சாரமாகிவிட்ட நிலையில், பிரதமரின் இந்தக் கோரிக்கை மிகுந்தமுக்கியத்துவம் பெறுகிறது.
சட்டம், ஒழுங்கைப் பராமரிக்கவும், வளர்ச்சிப் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளவும்அதிகாரிகள் தொடர்ந்து ஒரே பதவியில் சில காலம் நீடித்து இருப்பது தான் நல்லது என்று சிங் தனதுகடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அடிக்கடி இடமாற்றம் செய்யப்படும அதிகாரிகளின் செயல் திறனும் குறையும் என்று சுட்டிக்காட்டியுள்ள மன்மோகன் சிங், பொது நிதியைப் பயன்படுத்தும் விஷயத்தில் மத்திய, மாநில அரசுத்துறைகள் ஒளிவு, மறைவின்றி செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
நிர்வாகம் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ள பிரதமர், வறுமை ஒழிப்பு,கல்வியறிமின்மையை ஒழிப்பது, நோய்கள் ஒழிப்பு,
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்கள், பெண்கள், சிறுபான்மையினர்அனைவருக்கும் சம உரிமை கிடைக்கச் செய்வது போன்ற விஷயங்களுக்கு அரசுகள் முன்னுரிமைதந்து செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது இந்த மூன்று பக்கக் கடிதத்தை அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மன்மோகன் சிங் அனுப்பிவைத்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications