நதிகள் இணைப்பு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
டெல்லி:
நதிகள் இணைப்பு பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட கமிட்டியின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என்றுகோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நதிகளை இணைப்பது குறித்து ஆராய்வதற்காக 13 நபர்கள் கொண்ட கமிட்டியை முன்னாள் மத்திய அமைச்சர்சுரேஷ் பிரபு கடந்த 2002ம் வருடம் டிசம்பர் 13ம் தேதி நியமித்தார். இது தொடர்பான அறிக்கையை 2005ம்ஆண்டின் இறுதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அக்கமிட்டிக்கு உத்தரவிடப்பட்டது.
கமிட்டியின் வேலைகள் பாதியளவு முடிந்துள்ள நிலையில், அதன் பதவிக்காலம் கடந்த மாதம் 30ம் தேதியோடுமுடிந்துவிட்டது. ஆனால் புதிய அரசு கமிட்டியின் பதவிக்காலத்தை நீட்டிக்கவில்லை.
எனவே கமிட்டியின் பதவிக் காலத்தை நீட்டிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் வெள்ளப் பெருக்குக்கு உள்ளாகும் பகுதிகளில் இருந்து வறட்சியால்பாதிக்கபடும் பகுதிகளுக்கு நீர் விநியோகம் செய்யலாம். விவசாயப் பயன்பாட்டிற்கு மட்டுமின்றி குடிநீர்ப்பிரச்சினைக்கும் இத் திட்டம் தீர்வாக அமையும்.
மேலும் பெரிய அளவிலான வேலைவாய்ப்பிற்கும் வழிவகை செய்யும் என்று கூறியுள்ளார்.
2035ம் ஆண்டுகளுக்குள் தென்னிந்திய நதிகளை இணைப்பது, அடுத்த 8 ஆண்டுகளில் இமயமலையில்உற்பத்தியாகும் ஆறுகளை இணைப்பது என்ற மத்திய அரசின் திட்டத்துக்கு கடந்த 2002ம் ஆண்டு அக்டோபர்மாதம் நீதிமன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 10 ஆண்டுகளில் இத் திட்டத்தை முடிக்குமாறு நீதிமன்றம் அரசுக்குஉத்தரவிட்டது.
நதிகளை இணைப்பது தொடர்பாக தேசிய நீர்வள மேம்பாட்டு ஆணையத்தின் அறிக்கை குறித்து மாநிலங்களுக்குஇடையே ஒத்த கருத்தை ஏற்படுத்த மத்திய அரசு கடந்த வருடம் ஜூன் மாதம் ஒரு கமிட்டியை நியமித்தது.
நதிநீர் இணைப்பு என்பது 16 தென்னக நதிகளை இணைப்பது, 14 இமாலய நதிகளை இணைப்பது என்ற இரண்டுபகுதிகளைக் கொண்டது. முதலில் நதிகள் இணைப்புக்கு ஏதுவாக அவற்றை தேசியமயமாக்க வேண்டும்.
இதில் மத்திய அரசு இதுவரை எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பதை நீதிமன்றத்தில்தெரிவிக்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதத்தில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந் நிலையில் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள வழக்கு அடுத்த மாதம் 18ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications