கும்பகோணம்: மத்திய அரசு ரூ. 1 கோடி உதவி
கும்பகோணம் - திருச்சி:
கும்பகோணம் தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு நிவராணம் வழங்குவதற்காக மத்திய அரசின்சார்பில் சார்பில் ரூ. 50 லட்சமும், இப் பகுதியில் உள்ள கூரைப் பள்ளிகளை அகற்றி புதிய பள்ளிகள் கட்ட ரூ. 50லட்சமும் வழங்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங்கின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திஅறிவித்துள்ளார்.
(காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டதாக முதலில் தவறுதலாகக் கூறியிருந்தோம்.மன்னிக்கவும் !)
தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்லவும், காயமடைந்த குழந்தைகளைசந்திக்கவும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இன்று கும்பகோணம் சென்றார்.
இன்று பிற்பகலில் திருச்சி வந்த சோனியா, அங்கிருந்து ஹெலிகாப்டரில் பெட்ரோலிய அமைச்சர் மணிசங்கரஅய்யர், தகவல் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனுடன் கும்பகோணம் சென்றார்.
முதலில் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளைப் பார்த்த சோனியா, அவர்களின்பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். குழந்தைகளின் கைகளைப் பிடித்து கண் கலங்கியபடி சோனியாபேசினார். அப்போது அக் குழந்தைகளின் பெற்றோர் கதறி அழுதனர்.
குழந்தைகள் விரைவில் உடல் நலம் தேற மருத்துவமனையிலேயே அவர்களது பெற்றோருடன் சோனியா காந்திபிரார்த்தனையும் நடத்தினார்.
இதையடுத்து குழந்தைகளை இழந்த பெற்றோர் சிலரையும் அவர் சந்தித்தார். அப்போது அவர்கள் கதறி அழ,கண்கலங்கி நின்ற சோனியா, என்னால் உங்களுக்கு எந்த வார்த்தைகளும் சொல்லி ஆறுதல்படுத்திவிட முடியாது.உங்கள் வலிகளை நான் நன்றாக அறிந்திருக்கிறேன் என்றார்.
இதைத் தொடர்ந்து தீ விபத்து நடந்த பள்ளியையும் பார்வையிட்ட சோனியா, அங்கு செய்தியாளர்களிடம்பேசுகையில், இந்த சம்பவம் நடந்திருக்கவே கூடாத ஒன்று. பாதிக்கப்பட்டவர்களின் மனதை தேற்ற கடவுளைபிரார்த்திக்கிறேன்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு ரூ. 50 லட்சம் நிதியுதவியைஅளிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ரூ. 50 லட்சம் செலவில் கும்பகோணம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள கீற்றுக் கொட்டகை பள்ளிகளைமேம்படுத்தவும், அடிப்படை வசதிகள் செய்து தரவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
விபத்து நடந்தவுடன் பொது மக்கள் பலரும் தீக்குள் நுழைந்து குழந்தைகளை மீட்கும் நடவடிக்கைகளில்ஈடுபட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். அந்த மா மனிதர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.அதே போல மாவட்ட கலெக்டர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தனது அதிகாரிகளுடன் இங்கேயே முகாமிட்டுவேண்டிய நிவாரணப் பணிகளையும், சரியான நேரத்தில் மீட்புப் பணிகளையும் ஒருங்கிணைத்துள்ளார். அவருக்குஎன் பாராட்டுக்கள். நிலைமையை அவர் மிகச் சிறப்பாக கையாண்டுள்ளார் என்றார் சோனியா.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications