பிள்ளைகள் சாவுக்கு காரணமான ஆசிரியை ஏஞ்சலின்
கும்பகோணம்:
90 அப்பாவிக் குழந்தைகள் பலியானதற்கு ஆசிரியை ஏஞ்சலின் என்பவரின் அலட்சியப் போக்கே காரணம் எனத்தெரிய வந்துள்ளது.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் முதலில் சத்துணவுக் கூடத்திலிருந்துதான் தீ பரவியுள்ளது. இதை மஞ்சுளாஎன்பவர் (தீவிபத்தில் இவரது மகளும் பலியாகியுள்ளார்) பார்த்து பதறிப் போய் முதல் மாடியில் வகுப்பு நடத்திக்கொண்டிருந்த ஏஞ்சலின் ஆசிரியையிடம் கூக்குரலிட்டுத் தெரிவித்துள்ளார்.
அவரது குரலைக் கேட்டு ஓடி வந்த ஆசிரியை ஏஞ்சலின் மாணவிகளை எச்சரித்து வெளியே அனுப்புவதைவிடுத்து விட்டு, மேல் மாடிக்குப் போகும் படிக்கட்டின் கேட்டை இழுத்து மூடி விட்டு அவர் மட்டும் கீழே ஓடி வந்துவெளியேறியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து மற்ற ஆசிரியைகளும், முதல் மற்றும் இரண்டாவது மாடியில் இருந்த மாணவிகளும்பதறியடித்து ஓடி வந்துள்ளனர். இந்த நேரத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது இதுதான், முதலில்ஆசிரியைகள்தான் தப்பி ஓடியுள்ளனர், அவர்களைத் தொடர்ந்துதான் மாணவிகள் பதறி அடித்துவெளியேறியுள்ளனர்.
இந்தக் குழப்பத்தில் 3வது மாடியில் சிக்கிக் கொண்ட பிஞ்சுக் குழந்தைகள் நெருப்பின் கோரத்திலிருந்து தப்பமுடியாமல் கேட்டை அடித்து சப்தம் எழுப்பிப் பார்த்துள்ளனர். ஆனால் அதற்குள் காலன் அவர்களை காவு வாங்கிச்சென்று விட்டான்.
ஆசிரியை ஏஞ்சலின் மட்டும் தப்பி ஓடாமல் குழந்தைகளை எச்சரித்திருந்தால் நிச்சயம் பலரது உயிர்கள்காப்பாற்றப்பட்டிருக்கும் என்கிறார் மஞ்சுளா கண்ணீருடன்.
இதற்கிடையே பள்ளி நிர்வாகிகளை விசாரித்த காவல்துறையினர், ஆசிரியை ஏஞ்சலினையும் விசாரித்துள்ளதாகத்தெரிகிறது. அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்றும் ஒரு தகவல் கூறுகிறது.
இந்தக் கொடூர சம்பவத்தில் காங்கிரஸ் அபிமானிகளான சொக்கலிங்கம், பழனியம்மாள் தம்பதிகள் தங்களதுஇரண்டு பெண் குழந்தைகளை ஒருசேர இழந்தனர். இந்த தம்பதிகளுக்கு 3 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண்குழந்தை.
காங்கிரஸ் மீது கொண்ட பற்று காரணமாக தங்கள் குழந்தைகளுக்கு இந்திரா, சோனியா, பிரியங்கா, ராகுல் எனபெயரிட்டனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications