பலி 91 ஆக உயர்வு; 8 அதிகாரிகள் கைது
கும்பகோணம்:
கும்பகோணம் தீவிபத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு சிறுவன் இன்று பலியானான்.இதனையடுத்து பலி எண்ணிக்கை 91 ஆக உயர்ந்தது.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த பயங்கர தீவிபத்தில் 90 குழந்தைகள்உயிருடன் எரிந்து மாண்டனர். மேலும் 23 குழந்தைகள் தீக்காயத்துடன் மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந் நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் ஒரு மாணவன் இன்று காலை பலியானான்.
இதனையடுத்து தீவிபத்தில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்தது.
8 அதிகாரிகள் கைது:
இந்தச் சம்பவம் தொடர்பாக பள்ளித் தாளாளர் உள்ளிட்ட 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள்ளனர். பள்ளிஆசிரியைகள் 13 பேரிடம் போலீஸார் விசாரணையும் நடத்தியுள்ளனர்.
இந் நிலையில் மேலும் 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். முத்து பழனிச்சாமி (முதன்மை கல்வி அதிகாரி),நாராயணசாமி (மாவட்ட கல்வி அதிகாரி), பழனிச்சாமி (மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி), ராதாகிருஷ்ணன்(உதவி கல்வி அதிகாரி), மாதவன் (முன்னாள் உதவி கல்வி அதிகாரி), பரமசிவன் (வட்டாட்சியர்), ஜெயச்சந்திரன்(சேலத்தைச் சேர்ந்த பொறியாளர்) ஆகியோர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். இன்று காலை கும்பகோணம்உதவிக் கல்வி அலுவலர் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக கூடுதல் கண்காணிப்பாளர் கல்யாணசுந்தரம் கூறுகையில், கடந்த 3 நாட்களாக நாங்கள் நடத்தியதீவிர விசாரணைக்குப் பிறகு இந்த 8 பேரையும் கைது செய்ய முடிவு செய்தோம்.
இவர்கள் தங்களது பணியில் மிகவும் கவனக்குறைவாகவும், அலட்சியப் போக்குடனும் நடந்து கொண்டுள்ளதுதெரிய வந்துள்ளது. இவர்கள் கவனமாக இருந்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது என்றும் எங்களதுவிசாரணையில் தெரிய வந்ததைத் தொடர்ந்து 8 பேரையும் கைது செய்ய முடிவு செய்தோம் என்றார் அவர்.
கைது செய்யப்பட்டவர்களை போலீசார் கும்பகோணம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினார்கள். வழக்கைவிசாரித்த நீதிபதி 8 பேருக்கும் 15 நாள் சிறைக் காவல் விதித்து உத்தரவிட்டார்.
இதற்கிடையில் , இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக நாங்கள் யாரும் ஆஜராகமாட்டோம்என்று கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வெளிமாவட்டவழக்கறிஞர்களும் இந்த வழக்கில் ஆஜராக விடமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications