பிரதமருக்கு தமிழக சட்டசபை கண்டனம் !
சென்னை:
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீது நடந்த விவாத்தின்போது பிரதமர் மன்மோகன்சிங், திமுக தலைவர் கருணாநிதிஆகியோரை அதிமுக எம்.எல்.ஏக்கள் கடுமையாகக் குறை கூறினர்.
கும்பகோணம் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற மன்மோகன் சிங் வராததற்கு புவனகிரி தொகுதிஅதிமுக ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ. அருள் கடும் கண்டனம் தெரிவித்தார்.
அவர் பேசியதாவது:
தீ விபத்தை பற்றிக் கேள்விப்பட்டதும் முதல்வர் ஜெயலலிதா உடனே சென்று நிவாரண நடவடிக்கைகளில்ஈடுபட்டார்.
மன்மோகன்சிங் இரங்கல் அறிக்கை விட்டதோடு நிறுத்திக் கொண்டார். அவர் கும்பகோணத்துக்கு வந்து தீவிபத்தில் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தாததைத் தமிழக மக்கள் கண்டிக்கின்றனர்.
ஆனால் சோனியாதான் பிரதமர் என்ற பிம்பத்தை உருவாக்க கும்பகோணத்தில் அங்கும் இங்கும் ஓடி ஆறுதல்கூறினார் சோனியா. இவ்வாறு மக்களை மத்திய அரசைக் கண்டிக்கிறேன் என்றார்.
நிதியமைச்சர் பொன்னையன் கூறியதாவது:
கபினி அணைக்கட்டு நிரம்பிய பின்னர் தொடர்ந்து நீரைத் தேக்கினால் அணைக்கு ஆபத்து ஏற்படும்என்பதாலேயே கர்நாடக அரசு காவிரியில் தண்ணீரை விடுவித்தது.
ஆனால் மன்மோகன் சிங்குக்கும், சோனியா காந்திக்கும் தான் கடிதம் எழுதியதன் பேரில் கர்நாடக அரசுகாவிரியில் நீரை விடுவித்ததாக திமுக தலைவர் கருணாநிதி கூறுவது உண்மைக்குப் புறம்பானது. தமிழக மக்களைஏமாற்றுகிற நோக்கத்தில் பொய்ப் பிரசாரம் செய்து வருகிறார் கருணாநிதி.
நதிகளை இணைக்க முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி வந்தார். நதிகள் இணைப்பின் அவசியத்தை உணர்ந்தகடந்த பாஜக அரசு இது குறித்து ஆராய சுரேஷ் பிரபு தலைமையில் ஒரு குழுவை ஏற்படுத்தியது. ஏறக்குறைய 50சதவிகிதப் பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில் இக்குழுவின் பதவிக்காலம் கடந்த ஜூன் 30ம் தேதியோடுமுடிவடைந்துவிட்டது. இக்குழுவின் பதவிக்காலத்தை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு நீட்டிக்கவில்லை.
மேலும் நதி நீர் இணைப்புக்கு மத்திய அரசின் பட்ஜெட்டில் ஒரு பைசா கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றார்பொன்னையன்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications