பள்ளிகளை கலக்கிய வெடிகுண்டு புரளிகள்
சென்னை:
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் பள்ளிக் கூடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால்,மாணவர்கள் பெரும் பீதியடைந்தனர். பல பள்ளிகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் பல்வேறு பள்ளிகளில் இந்த வெடிகுண்டு பீதி பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது.சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனுஷ்கோடி நடுநிலைப் பள்ளிக்குத்தான் முதலில் மிரட்டல் வந்துள்ளது. ஆனால்இந்த வெடிகுண்டு புரளிக்குக் காரணம் இப்பள்ளியின் 3 மாணவிகள்தான் என்பது போலீஸாரின் விசாரணையில்தெரியவந்தது.
இந்தப் பள்ளியில் படித்த 3 மாணவிகள் தங்களது பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ்களை வாங்க பெற்றோருடன்வந்துள்ளனர். பரீட்சையில் தோல்வியுற்ற நிலையில் சான்றிதழை வாங்கிச் சென்றால் பெற்றோர்களிடம் திட்டுவாங்க வேண்டும் என்பதால், பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி விட்டு தப்பியுள்ளனர். இதனால் பள்ளிமுழுவதும் பீதி ஏற்பட்டுவிட்டதாக போலீஸார் கூறியுள்ளனர்.
பள்ளி முழுவதும் வெடிகுண்டு நிபுணர்களும் தீவிரமாக சோதனையிட்டனர். இதே சமயத்தில், அருகில் இருந்தஇரண்டு மாநகராட்சிப் பள்ளிகளிலும் வெடிகுண்டு பீதி பரவியது. இதனால் அந்தப் பள்ளியில் இருந்த மாணவ,மாணவிகள் வெளியே ஓடி வந்து விட்டனர்.
இது அப்படியே பரவி நகர் முழுவதும் உள்ள 26 பள்ளிகளில் பெரும் பீதீயை ஏற்படுத்தி விட்டது. பெற்றோர்கள்தங்களது பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளுக்குச் சென்று அவர்களை கூட்டிச் சென்றனர். பல பள்ளிகளில்,ஆசிரியர்கள் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று கூறிய பிறகும் பெற்றோர்கள் கேட்காமல் பிள்ளைகளைஅழைத்துச் சென்றனர்.
இதனால் சென்னையில் உள்ள கிட்டத்தட்ட அனைத்துப் பள்ளிகளின் பிள்ளைகளும் நேற்று காலையிலேயேவீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். பல பள்ளிகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுதிங்கள்கிழமை பள்ளிக்கு வந்தால் போதும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதேபோல, சேலம் சிந்தி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் அங்கு படிக்கும் பிள்ளைகள்வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். தொலைபேசித் தகவலால் இந்த பீதி ஏற்பட்டது. இருப்பினும் பள்ளியில்வெடிகுண்டு எதுவும் இல்லை.
நாமக்கல் நகரிலும் சில பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசித் தகவல் வந்தது.இதனால் அங்குள்ள பள்ளிகளிலும் பதற்றம் ஏற்பட்டது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications