ஜெ. குற்றச்சாட்டு: தேர்தல் கமிஷன் மறுப்பு
சென்னை:
மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் எந்த முறைகேடுகளும் செய்ய முடியாது என தேர்தல் கமிஷன்விளக்கமளித்துள்ளது.
மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் செய்யப்பட்டதால் தான் மக்கவைத் தேர்தலில் அதிமுகதோற்றதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார்.
இந் நிலையில் வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள கேரள மாநிலதலைமைத் தேர்தல் அதிகாரி தாமஸ் மற்றும் மத்திய இணை தேர்தல் ஆணையர் ஜா ஆகியோர் இன்று தமிழகஅனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அதிமுக சார்பில் அமைச்சர் பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், திமுகவின் சார்பில் வழக்கறிஞர் இளங்கோவன்உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் ஜா பேசுகையில்,
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முழுக்க பரிசோதிக்கப்பட்டவை. அவற்றின் செயல்பாடுகள்நம்பகத்தன்மை உடையவை. அவை தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்ற பேச்சுக்கே இடமில்லை. முதல்வர்ஜெயலலிதா கூறியது போன்ற தவறுகள் நடைபெற சாத்தியமில்லை.
நாடு முழுவதும் பல உயர்நீதிமன்ற நீதிபதிகளின் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்பரிசோதிக்கப்பட்டன. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் எனக்குத் தெரிந்து அதிமுக சார்பில் புகார் எதுவும்பதிவு செய்யப்படவில்லை. இன்று கூட்டத்தில் கலந்து கொண்ட பொன்னையன் இதுபற்றிக் கூறினார். ஆனால்ஆதாரம் எதையும் சமர்பிக்கவில்லை என்றார்.
பின்னர் பேசிய தாமஸ் கூறியதாவது:
வாக்காளர் பட்டியல் குளறுபடி தொடர்பான எனது அறிக்கையை அடுத்த மாதம் 7ம் தேதி சமர்பிக்க இருக்கிறேன்.இன்றைய கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக அனைத்துக் கட்சியினரும் தங்களது கருத்துக்களைத்தெரிவித்தனர். அறிக்கை தயாரிக்கும் போது இவற்றையும் கருத்தில் கொள்வேன்.
புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்க, வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களைப் பயன்படுத்த வேண்டும் என்றுஆளுக்கட்சியினர் கூறினர். ஆனால் எதிர்க்கட்சியினர், அரசு அலுவலர்களையே பயன்படுத்த வேண்டும் என்றுவற்புறுத்தினர். தவறேதும் ஏற்படாதவாறு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படவேண்டும் என்பதில் தேர்தல்ஆணையம் கவனமாக இருக்கிறது என்றார்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications