மதுரை: உயர் நீதிமன்றக் கிளை தொடக்கம்
மதுரை:
மதுரையில் உயர் நீதிமன்றக் கிளையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.சி.லஹோட்டி குத்துவிளக்கேற்றிதொடங்கி வைத்தார்.
மதுரை உலகனேரியில் ரூ. 68 கோடி செலவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை கட்டப்பட்டுள்ளது. இதன்திறப்பு விழா இன்று மாலை 4 மணியளவில் நடந்தது.
ஆயிரக்கணக்கான பொது மக்கள் பங்கேற்க இந்த பிரமாண்டமான விழாவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமைநீதிபதி சுபாஷன் ரெட்டி, மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ், இணை சட்ட அமைச்சர் வேங்கடபதி, தமிழகசட்டத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் அழைப்பிதழில் இல்லாததால் அவர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் நீதிபதிகள் விவரம் இன்றே அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
வழக்குப் பதிவு தொடங்கியது
இந் நிலையில் இந்த உயர் நீதிமன்றக் கிளையில் இன்று காலை முதலே வழக்குகள் பதிவு தொடங்கியது.
ஏராளமான வழக்கறிஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வழக்குகளைப் பதிவு செய்தனர். வரும் திங்கள்கிழமை முதல்வழக்கு விசாரணைகள் நடைபெறவுள்ளது. தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி சில நாட்கள் தங்கியிருந்து மதுரைகிளையில் வழக்குகளை விசாரிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications