ஜெ. தோல்வியின் அதிர்ச்சியில் இருக்கிறார்: வைகோ
கோவை:
தேர்தல் தோல்வியின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் விலகாத ஜெயலலிதா, தனது தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைக் குறை கூறியிருக்கிறார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நெல்லையில் இருந்து நடை பயணத்தைத் தொடங்கவுள்ள வைகோவுடன் 3,000இளைஞர்களும் பாத யாத்திரையில் பங்கேற்கவுள்ளனர்.
இந்த இளைஞர்கள் மதிமுகவின் தொண்டர் படையில் இருந்து வைகோவால் தேர்வு செய்யப்பட்டவர்களாவர்.இவர்களுக்கு தற்காப்புக் கலைகள், கூட்டத்தைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
கடந்த ஒரு வாரமாக உடுமலைப்பேட்டையில் நடந்து வந்த இந்த பயிற்சி முகாம் இன்றுடன் முடிவடைந்தது.இதையடுத்து அவர்கள் மத்தியில் உரையாற்ற வைகோ இன்று உடுமலை வந்தார்.
அந்த இளைஞர்களின் அணிவகுப்பைப் பார்வையிட்ட வைகோ பின்னர் அவர்கள் மத்தியில் பேசினார்.
முன்னதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
எனது நடை பயணம் சென்னையில் வரும் செப்டம்பர் 15ம் தேதி முடிவடையும். என்னுடன் சீருடை அணிந்த 3,000இளைஞர்களும் நடை பயணத்தில் பங்கேற்பார்கள். இளைஞர்களிடையே வன்முறை மனப்பான்மை வளரக்கூடாது என்பது தான் என பயணத்தின் முக்கிய நோக்கம். அதை வலியுறுத்தியே பயணம் அமையும்.
மேலும் தமிழகத்தில் நடந்து வரும் ஜெயலலிதாவின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக மக்களைத் திரட்டவும்,நதி நீர் இணைப்பு, காவிரி விவகாரத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு, மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வைக்கும்விதமாக நடை பயணம் இருக்கும்.
மதிமுகவை வலுப்படுத்துவதோடு, கட்சியின் கிளைகள், கட்சியின் கொடிகள் இல்லாத கிராமங்களே இல்லாதஅளவுக்கு பரவிட நடை பயணம் உதவும்.
40 தொகுதிகளிலும் தோற்ற ஜெயலலிதா, தனது தோல்விக்கு எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷினை குறைகூறியிருக்கிறார். மக்களின் தீர்ப்பை ஏற்க அவர் தயாராக இல்லை, அவர் திருந்தவும் இல்லை. தோல்வியின்அதிர்ச்சியில் ஏதேதோ பேசுகிறார்.
வரும் சட்டமன்றத் தேர்தலிலும் எங்களது ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தொடரும். கூட்டணி விவகாரங்களைகவனிக்க தனி குழுவை அமைத்துள்ளோம். பொடாவை நீக்க உரிய நடவடிக்கையை மத்திய அரசு தகுந்தநேரத்தில் எடுக்கும் என்று நம்புகிறேன் என்றார் வைகோ.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications