முதல் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி
மதுரை:
மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் முதல் வழக்கை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதிஎன்.தினகரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
கிளை நேற்று மாலை கோலாகலமாக தொடங்கி வைக்கப்பட்டது. விடுமுறை தினமாக இருந்தபோதிலும், தொடக்க நாளில் முதல் வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி விருப்பம்தெரிவித்திருந்ததால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
முதல் வழக்காக, ஒரு ஹேபியஸ் கார்பஸ் (ஆள்கொணர்) மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சங்கரன்கோவிலைச் சேர்ந்த ஜீவராஜ் என்பவர் குண்டர் சட்டத்தின் கீழ்போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி மனு தாக்கல்செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் ஜீவராஜ் சார்பில் மதுரை வழக்கறிஞர் சங்கத் தலைவர் வெள்ளைச்சாமி ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜூலை 26ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர். மேலும்ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள்உத்தரவிட்டனர்.
இந்த முதல் விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லஹோட்டி முன்னிலையில் நடந்தது.
முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அந்த மனு ஒரு ரிட் மனுவாகும். ரிட்மனுக்களை விசாரிக்கும் அதிகாரத்தை மதுரை கிளைக்கு தரக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றவழக்கறிஞர்கள் கூறி வரும் நிலையில், முதல் மனுவே ரிட் மனுவாக அமைந்து குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications