இராக் தீவிரவாதிகளுக்கு இந்தியா கோரிக்கை
டெல்லி:
தங்கள் பிடியில் இருக்கும் மூன்று இந்தியர்களையும் விடுவிக்குமாறு இராக்கிய தீவிரவாதிகளுக்குமத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் அஹமத் கோரிக்கை விடுத்துள்ளார்.
தீவிரவாதிகளுடன் இராக்கில் உள்ள இந்தியத் தூதரகம் மறைமுகத் தொடர்பைஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. தூதரகத்தில் பணிபுரியும் ஒரு இராக்கியர் மூலமாகதீவிரவாதிகளுடன் இந்தியா ரகசிய பேச்சு நடத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், இன்று இந்தகோரிக்கையை மத்திய அரசு விடுத்தது.
அமைச்சர் அஹமதின் இந்தக் கோரிக்கை இராக், குவைத், ஓமன் மற்றும் அல்-அரேபியா உள்ளிட்டபல வளைகுடா நாட்டுத் தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள் மூலம் வெளியிடப்பட்டது.
அதில் பேசிய அஹமத், உங்களிடம் பிடிபட்டுள்ள இந்தியர்கள் அமெரிக்கர்களுக்கு உதவ அங்குவரவில்லை. தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற பிழைப்பு தேடி வந்தவர்கள். இராக்குக்கு படைகளைஅனுப்புவதில்லை என்பதில் மிக உறுதியாக இருக்கும் நாடு இந்தியா.
இராக்குக்காக பல சர்வதேச அரங்குகளில் குரல் எழுப்பிய நாடு இந்தியா. அரேபியர் நலனில்இந்தியாவின் ஆர்வம் உலகறிந்தது. இராக்குக்கு இன்னும் மனிதாபிமான உதவிகளை தொடர்ந்துசெய்து வருகிறோம். இதனால் அந்த அப்பாவிகளை விடுவித்துவிடுங்கள் என்றார்.
இந் நிலையில் பணயக் கைதியாக உள்ள அந்தர்யாமியின் தந்தை ராமமூர்த்தி, ஜனாதிபதி அப்துல்கலாம், பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் ஆகியோரை சந்தித்துதனது மகனைக் காக்குமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.
இதற்கிடையே கடத்தப்பட்ட திலக் ராஜ், சுக்தியோ சிங், அந்தர்யாமி ஆகியோரை மீட்க தாங்களும்தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்தி வருவதாக அவர்களை இராக்குக்கு அனுப்பிய குவைத்நிறுவனமான கல்ப் லிங்க் டிரானஸ்பேராட் கம்பெனி தெரிவித்துள்ளது.
இந் நிலையில் பலூஜா உள்ளிட்ட நகர்களில் உள்ள பாதிக்கப்பட்ட இராக்கிய குடும்பத்தினருக்குநஷ்ட ஈடு வழங்க வேண்டும், அமெரிக்க, குவைத் சிறைகளில் உள்ள இராக்கியர்களை விடுவிக்கவேண்டும் என அந்தத் தீவிரவாத அமைப்பு நிபந்தனை விதித்துள்ளது.
இதனால், அவர்களை விடுவிப்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications