திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை தமிழ் எம்.பி
சென்னை:
பெங்களூரில் இன்று நடக்கும் உலகத் தமிழர் பேரவை மாநாட்டில் பங்கேற்க வந்த இலங்கை தமிழ்எம்.பியான ஈழவேந்தன் சென்னை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பிஅனுப்பப்பட்டார்.
பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் இன்று உலகத் தமிழர் பேரவையின் இரண்டாமாண்டு நிறைவு விழாமாநாட்டு நடக்கிறது. இதில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பங்கேற்க சென்னைஉயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதில், நெடுமாறன் தவிர பெரியார் திராவிடக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி,தென்னாப்பிரிக்கத் தமிழறிஞர் கோவிந்தசாமி, பிரான்ஸ் தமிழறிஞர் அலன் ஆனந்தன், இலங்கைஎம்.பிக்கள் சந்திரசேகரன், செனாதிராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த விழாவை இலங்கை வட கிழக்கு மாகாண எம்.பியான ஈழ வேந்தன் துவக்கி வைப்பதாகஇருந்தது.இதற்காக ஈழவேந்தன் கொழும்பிலிருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார்.
விமான நிலையம் வந்திறங்கியவுடன் அவரை விமான நிலைய இமிக்ரேசன் அதிகாரிகள் தடுத்துநிறுத்தினர்.
இந்தியாவுக்குள் நீங்கள் நுழைய அனுமதி இல்லை. எனவே உங்களை இலங்கைக்கு திருப்பிஅனுப்பவுள்ளோம் என்று ஈழவேந்தனிடம் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்துகோபமடைந்த ஈழவேந்தனின் ஆதரவாளர்கள், அதிகாரிகளுடன் வாதாடினர். நெடுநேரம்வாதாடியும் பலன் ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து ஈழவேந்தன் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். விடுதலைப் புலிகள்ஆதரவு தமிழ் தேசிய கூட்டணியின் எம்.பியான ஈழவேந்தன், இதற்கு முன்பும், கடந்த 2000ம்ஆண்டிலும் இதே போல சென்னையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications