கருணா கூட்டாளிகள் 7 பேர் சுட்டுக் கொலை
கொழும்பு:
கொழும்வுக்கு அருகே இன்று அதிகாலையில் திடீர் தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகள்,கருணாவின் கூட்டாளிகள் 7 பேரையும் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த இலங்கை ராணுவத்தின்உளவுப் பிரிவு அதிகாரியையும் சுட்டுக் கொன்றனர்.
இதில் சிலர் கருணாவுக்கு மிக நெருக்கமானவர்களாவர். கருணாவுக்கும் அவரதுஆதரவாளர்களுக்கும் இலங்கை ராணுவம் தான் அடைக்கலம் தந்து வருவதாக புலிகள் குற்றம் சாட்டிவருகின்றனர்.
இதை இலங்கை அரசு மறுத்து வந்த நிலையில், இன்று இத் தாக்குதலை புலிகள் நடத்தினர். இலங்கைஉளவுப் பிரிவினரால் மிகப் பாதுகாப்பான இடத்தில் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இவர்களைஅடையாளம் கண்டு புலிகள் கொன்றுள்ளனர்.
இந்தத் தாக்குதல் மூலம் கருணா கும்பலுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலானதொடர்பையும் புலிகள் வெளிக் கொண்டு வந்துவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள்கருதுகின்றனர்.
அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்து பேச்சு நடத்த நார்வே துணைவெளியுறவு அமைச்சர் விடார் ஹெல்ஜெசன் இன்று கொழும்பு வரும் நிலையில் இத் தாக்குதல்நடந்துள்ளது.
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் இருந்து கொழும்பு கிளம்பும் முன் நிருபர்களிடம் பேசியஹெல்ஜெசன்,
இலங்கையில் உடனடியாக மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவது மிக, மிக அவசியம்.இல்லாவிட்டால் மீண்டும் போர் வெடிக்கும் மிக அபாயகரமான சூழல் நிலவுகிறது என்றார்.
நாளை ஹெல்ஜெசன் கிளிநொச்சிக்குக் சென்று புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்கிறார்.பின்னர் கொழும்பில் அதிபர் சந்திரிகா, பிரதமர் மகிந்தா ராஜபகஷே ஆகியோரையும் சந்தித்துப்பேசவுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications