ஜெயலலிதா பதவி விலக வேண்டும்: காங்கிரஸ்
சென்னை:
மக்கவைத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ்சட்டமன்றக் கட்டிச் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
மக்களவைத் தேர்தலின்போது தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் 233 தொகுதிகளில் ஜனநாயக முற்போக்குக்கூட்டணி தான் முன்னிலை வகித்தது. இது ஜெயலலிதாவை மக்கள் முழுமையாக நிராகரித்துவிட்டதையே காட்டுகிறது.
தேர்தல் தோல்விக்குப் பின் தினந்தோறும் சலுகைகளை, ரத்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதன்மூலம் நான் தவறுசெய்துவிட்டேன் என்பதை அவரே ஒப்புக் கொள்கிறார்.
தவறை ஒப்புக் கொள்ளும் ஜெயலலிதா நியாயப்படி ராஜினாமா செய்வது தான் நல்லது.
எதிர்க் கட்சிகளுடன் விவாதிக்காமலேயே தமிழக அரசு பல சட்ட மசோதாக்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றி வருகிறது.இதற்கு ஆளுநர் ராம்மோகன் ராவ் அனுமதி தரக் கூடாது. இது தொடர்பாக ராவை விரைவில் சந்திப்பேன்.
தினந்தோறும் கொலைகள், கொள்ளைகள் என தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. மக்களால்நிராகரிக்கப்பட்டதால் ஏற்பட்ட தனது தோல்வியைக் கூட ஒப்புக் கொள்ளாமல் மின்னணு எந்திரங்களில் முறைகேடு நடந்ததாகஜெயலலிதா சொல்வது ஏற்கவே முடியாத ஒன்று என்றார் பாலசுப்பிரமணியம்.
இளங்கோவன் தாக்கு:
பொள்ளாச்சியில் நிகழ்ச்சியொன்றில் பேசிய மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சர் இளங்கோவன் கூறுகையில்,
இன்று தமிழகத்தில் நடப்பது சட்டசபையே அல்ல. கட்டாயம் நடத்தியாக வேண்டும் என்பதால் நடத்துகிறார்கள். எதிர்க்கட்சியினரை தூக்கி வெளியில் வீசிவிட்டு வெறும் 5 நாட்களுக்கு சபையை நடத்துகிறார்கள்.
சரி, ஆளும் கட்சியினராவது மக்கள் பிரச்சனையை பேசுகிறார்களா?. அவர்களுக்கு 5 நிமிடம் பேச ஒதுக்கப்படுகிறது. அதில் 4நிமிடம் அம்மா, தாயே, கருமாரி, காளியம்மா, கருப்பாயி என அம்மா புகழ் பாடிவிட்டு ஒரு நிமிடம் தனது தொகுதிப் பிரச்சனையைபெயருக்குச் சொல்கிறார்கள்.
தமிழகம் மட்டுமல்ல, நாடு முழுவதுமே இப்படித்தான் இருக்கிறது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications