அதிமுக அரசு விலக வேண்டும்: கருணாநிதி
சென்னை:
மக்கள் விரோத, ஜனநாயக விரோத அதிமுக அரசு பதவியில் நீடிக்கத் தகுதியில்லை, அதிமுக அரசு பதவி விலகவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபைக் கூட்டத் தொடரை ஒரு வார காலத்திற்கு மட்டுமே நடத்துவது என்ற முடிவைக் கண்டித்து ஜனநாயகமுற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் சென்னையில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது.
மயிலாப்பூர் மாங்கொல்லை பகுதியில் நடந்த இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டுபேசினார். அப்போது, இந்த ஆட்சியில் எதிர்க்கட்சிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்,விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்.
சட்டசபையில் தங்களது கருத்துக்களை எழுப்ப மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆளுங்கட்சியினர் அனுமதி தரவில்லை.இதனால் தான் மக்கள் சபைக்கு வந்திருக்கிறோம். இந்த அரசுக்கு எதிராக மக்கள் பொங்கியெழ வேண்டியகட்டாயதில் உள்ளனர். அது விரைவில் நடக்கும்.
கடந்த ஒரு மாதத்தில் சென்னை நகரில் பல்வேறு கொலைகள், கொள்ளைச் சம்பவங்கள் மக்களைபீதிக்குள்ளாக்கியுள்ளன, சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளன.
அத்தோடு, காவல்துறையினரே திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். சென்னை கடற்கரையில் காவலர்கள்வழிப்பறியில் ஈடுபடுகிறார்கள். மதுரையில் நடந்த இரட்டைக் கொலைக்கு இன்ஸ்பெக்டர் ஒருவரே காரணம்என்கிறார்கள்.
இந்த நாசகர அதிமுக ஆட்சியை பதவியில் நீடிக்க விடலாமா? பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமை அதிமுகஅரசுக்கு உள்ளதா? அதிமுக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார் அவர்.
இக் கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம்ஆகியோரும் பங்கேற்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications