கபினி: அணையை காக்க தமிழகத்துக்கு நீர் திறப்பு
பெங்களூர்:
குடகு உள்ளிட்ட கர்நாடகத்தின் காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால், கபினிஅணையிலிருந்து தமிழகத்துக்கு மீண்டும் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பலத்த மழை பெய்து, கபினி அணை நிரம்பும் அபாயம் ஏற்படும்போதெல்லாம் அந்த நீரை தமிழகத்துத்து திறந்துவிடுகிறது கர்நாடகம். அதே நேரத்தில் குறுவை, சம்பா பயிரிடும் நேரத்தில் நீர் கேட்டால் தருவதில்லை.
இப்போது மீண்டும் கன மழையால் கபினிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், தமிழகத்துக்கு நீரைத்திறந்துவிட்டுள்ளது. இப்போது கபினி அணையில் 2,282.35 அடி நீர் உள்ளது. இந்த அணையின் மொத்தகொள்ளவு 2,284 அடியாகும்.
அணைக்கு வினாடிக்கு 12,228 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இதையடுத்து வினாடிக்கு 2,325 கன அடி நீரைகர்நாடகம் திறந்துவிட்டுள்ளது.
இதையடுத்து மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
ஆடிப் பெருக்கை முன்னிட்டு மேட்டூர் அணை கடந்த சில நாட்களாக திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர் இருப்பு 70அடியாக குறைந்துதிருந்தது. இந் நிலையில் கபினி நீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும் மேட்டூர் நீர்ப் பிடிப்புப் பகுதியில் பெய்யும் சிறிதுமழையினாலும், வினாடிக்கு 3,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
அணை திறக்கப்படுமா? ஜெ. பதில்:
இதற்கிடையே இன்று சட்டமன்றத்தில் பொதுப் பணித்துறை, நீர்ப்பாசனத் துறை உள்ளிட்ட 4 துறைகளின் மானியக் கோரிக்கைகள்மீதான விவாதத்தின்போது, காவிரிப் பாசனப் பகுதி விவசாயத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படுமா என்று பார்வர்ட் பிளாக் உறுப்பினர்சந்தானம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, மேட்டூர் அணையிலிருந்து தற்போது ஆடிப் பெருக்கு விழாவுக்காக தினசரி ஒரு டிஎம்சி தண்ணீர்வீதம் 7 நாட்களுக்கு திறந்து விட உத்தரவிட்டுள்ளேன். அணையில் உள்ள நீர் காவிப் பாசன விவசாயத்திற்கு போதுமானதல்ல. அணைக்குநீர்வரத்து தொடர்ந்தால் பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவது குறித்து பசீலிக்கப்படும்.
காவிப் பாசனப் பகுதி விவசாயிகள் தண்ணீர் அதிகம் தேவைப்படாத சர்க்கரைச் சோளத்தை பயிரிட்டு பலன் அடையலாம். இந்த சோளசாகுபடிக்கு உதவ தொழிலதிபர்கள் முன் வந்துள்ளனர் என்றார் ஜெயலலிதா.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications