தலைமை நீதிபதிக்கு எதிராக வழக்கறிஞர்கள்!
சென்னை:
தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியை இடம் மாற்றம் செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று முதல்காலைவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பில் குதித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையை திறக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோரிக்கைவிடுத்து பல வகையான போராட்டங்களில் இறங்கினர். அவர்களுக்கு எதிராக மதுரை, திருச்சி உள்ளிட்ட தென் மாவட்டவழக்கறிஞர்களும் எதிர் போராட்டத்தில் இறங்கினர்.
மேலும், மதுரை கிளைக்கு ரிட் மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் தரப்படக் கூடாது என சென்னை வழக்கறிஞர்கள் கோரிக்கைவைத்திருந்தனர்.
இந் நிலையில் சென்னை வழக்கறிஞர்களின் எல்லா தடைகளையும் கடந்து மதுரை உயர்நீதிமன்ற கிளை சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. அன்றைய தினமே முதல் வழக்கின் விசாரணையும் நடந்தது. தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியும், நீதிபதிதினகரும் இணைந்து முதல் வழக்கை விசாரித்தனர்.
முதல் விசாரணையாக எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கே ஒரு ரிட் மனுவாகும். இதற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கக் கூட்டத்திற்குப் பின்னர் சங்கத் தலைவர் பிரபாகரன் பிரபாகரன் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்திற்குக் கொடுத்த உறுதிமொழியை மீறி விட்டார். மதுரைகிளைக்கு ரிட் மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் வழங்கப்படாது என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மதுரைகிளையின் முதல் வழக்கே ரிட் மனு என்பது எங்களை அவமானப்படுத்தும் செயலாகும்.
எனவே சுபாஷன் ரெட்டியை உடனடியாக தலைமை நீதிபதி பதவியிலிருந்து இடமாற்றம் செய்ய வேண்டும். ஒருங்கிணைந்ததிருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்கள் சென்னை உயர்நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் தொடர்ந்து தொடர வேண்டும். 9 நீதிபதிகள்குழுவின் அறிக்கை இன்னும் 2 வாரங்களில் வெளியிடப்பட வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் மிகத்தீவிரமாக ஈடுபடவுள்ளோம் என்றார் பிரபாகரன்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications