கொள்ளை, குண்டு புரளிகள்: திமுக மீது ஜெ. புகார்
சென்னை:
சட்டம், ஒழுங்கு நிலையை சீர்குலைக்கும் வகையில் தமிழகத்தில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி, வெடிகுண்டு புரளிகள்ஆகியவற்றை திமுகவினர் தான் மேற்கொண்டு வருவதாக முதல்வர் ஜெயலலிதா பரபரப்பு புகாரைக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில், தொடர் கொள்ளைகள் நடந்து வருகின்றன. புறநகர்ப் பகுதிகளில் கொலைகளும்அதிகரித்துள்ளன.
இந் நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் புகார்கூறியுள்ளன. முதல்வர் ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என்றும் கோரியுள்ளன.
இதற்குப் பதில் அளிக்கும் வகையில், ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சட்டம் ஒழுங்கு நிலையைசீர்குலைக்கும் நோக்கத்துடன் திமுகவினரே கொள்ளை, வழிப்பறிகளில் ஈடுபட்டு வருவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெ. அறிக்கை விவரம்: தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு நிலையை சீர்குலைத்து, மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கும்வகையில், திமுகவினரும், அவர்களின் தலைவர் கருணாநிதியும் திட்டமிட்டு கொள்ளை, திருட்டு, வழிப்பறிகள், வெடிகுண்டுபுரளிகள் ஆகியவற்றை தமிழகம் முழுவதும் அரங்கேற்றி வருகிறார்கள்.
சமீபத்திய கொள்ளை, திருட்டு, வழிப்பறி, வெடிகுண்டு புரளி ஆகியவற்றில் திமுகவினருக்கு முக்கிய பங்கு உள்ளது காவல்துறைவிசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும், சென்னையில் சமீபத்தில் ஒரே நாளில் பல்வேறு பள்ளிகளில் வெடிகுண்டு புரளிகள் கிளம்பியதன் பின்னணியிலும்திமுகவினர் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இந்த வெடிகுண்டு புரளிகளினால் பல மாணவ, மாணவிகள் நெரிசலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களின் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு திமுகவும், அதன் தலைவர் கருணாநிதியும்தான் பொறுப்ற்ேக வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைக் காப்பதில் தமிழக அரசு அதிகபட்ச முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறது. கும்பகோணம்பள்ளிக் கூட தீவிபத்திற்குக் காரணமான அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் பாரபட்சம்பார்க்கப்பட மாட்டாது.
கும்பகோணம் சம்பவத்திற்கு பள்ளி நிர்வாகம், கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கே முழுமையான காரணமாகும்.அரசுக்குத் தவறான தகவல்களைத் தந்து அதன் மூலம் பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கி அரசையும் ஏமாற்றியுள்ளனர்.
கடந்த 1997ம் ஆண்டு தஞ்சை பெரிய கோவிலில் பெரும் தீவிபத்து ஏற்பட்டு 45 பேர் பலியாயினர். இதுதொடர்பான விசாரணைக்கமிஷன் அறிக்கை கடந்த திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. ஆனால் அந்த அறிக்கையை திமுக ஆட்சி கிடப்பில் போட்டுவிட்டது.
கும்பகோணம் விபத்தைத் தவிர்த்திருக்கலாமே என்று இப்போது கருணாநிதிக்கு ஆதரவாக பேசும் காங்கிரஸ் தலைவர்எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், பெரிய கோவில் விஷயத்தில் கருணாநிதி நடந்து கொண்டது குறித்து வாய் திறக்காதது ஏன் என்றுகேள்வி எழுப்பியுள்ளார் ஜெயலலிதா.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications