கருணாநிதியை சபைக்கு அழைக்கும் பொன்னையன்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி சட்டசபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு நேரில் கருத்துக் கூற முன் வர வேண்டும் என்றுநிதியமைச்சரும், அவை முன்னவருமான பொன்னையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ட்டசபையில் இன்று கேள்வி நேரத்திற்குப் பின் அவர் பேசுகையில், கருணாநிதி சட்டசபைக்கு வெளியே இருந்து கொண்டு அவைநடவடிக்கைகள் குறித்துக் கருத்துக் கூறுவதை தவிர்க்க வேண்டும். சட்டசபைக் கூட்டங்களில் அவர் பங்கேற்க வேண்டும். இங்குவந்து நேரில் கருத்துக் கூற முன் வர வேண்டும்.
பேரவையில் என்ன நடக்கிறது, என்ன நடந்தது என்பதை பேரவைக் குறிப்பேடுகளைப் பார்த்துத் தெரிந்து கொண்டு அதன் பின்கருத்துக் கூறுவதுதான் அவருக்கு நல்லது, சபையின் மாண்பும் அப்போதுதான் காப்பாற்றப்படும் என்றார்
பத்திரிக்கைகளுக்கு அட்வைஸ்:
கருணாநிதியின் அறிக்கைகளை முழுமையாகப் படித்துவிட்டு, உண்மை நிலையையும் பரிசீலித்து விட்டு அதன் பிறகு செய்தியாகவெளியிடுங்கள், காரணம் அவரது அறிக்கை முழுவதும் பொய்களால் ஆனவை என்று பத்திரிக்கையாளர்களுக்கும்பொன்னையன் "அறிவுரை" வழங்கினார்.
சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தைக் கொண்டு வந்து பொன்னையன் பேசுகையில்,
கருணாநிதி முரசொலியில் எழுதியுள்ளதை சில பத்திரிக்கைகள் செய்தியாக பிரசுரித்துள்ளன. கருணாநிதியின் அறிக்கையும்,பேச்சுக்களும் முற்றிலும் பொய்களையே அடிப்படையாகக் கொண்டவை.
எனவே எதிர்காலத்தில் கருணாநிதியின் அறிக்கை, பேட்டி ஏதாவது இருந்தால் அவற்றை முழுமையாக பரிசீலித்து அதில்உள்ளவை உண்மையான தகவல்களா என்பதை அறிந்து கொண்ட பின்னர் செய்தியாக பிரசுரியுங்கள். கருணாநிதி சொல்வதைஎல்லாம் நம்பி விடாதீர்கள்.
கருணாநிதியின் பேச்சை பிரசுரித்த பத்திரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு விரும்பவில்லை. இனிமேல் அவர்கள்உண்மையான செய்திகளை மட்டுமே பிரசுரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை என்று மறைமுகமாக எச்சரித்தார் பொன்னையன்.
சட்டசபையில் பொய்களை மட்டுமே பதிலாக சொல்பவர் நிதியமைச்சர் பொன்னையன் என திமுகவின் தலைமைநிலையச் செயலாளர் துரைமுருகன் சமீபத்தில் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications