தாலி பறித்த 3 திருடர்களுக்கு அடி, உதை
தேனி:
தேனி மாவட்டம் வெங்கடாச்சலபுரம் பகுதியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த 3 திருடர்களை கிராம மக்கள் தூணில்கட்டி வைத்து அடித்து, உதைத்து ரத்தம் சொட்டச் சொட்ட போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
வெங்கடாச்சலபுரம் கிராமத்தைச் சே ர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி பத்மாவதி. இவர் தனது தோட்டத்திற்கு தனியாகநடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் சைக்கிளில் வந்த 3 பேர் பத்மாவதி அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினர்.
பத்மாவதி கூக்குரல் எழுப்பியதைத் தொடர்ந்து அப் பகுதியினர் திரண்டு வந்து 3 திருடர்களையும் விரட்டினர். காட்டுப் பகுதியில்தப்பியோடிய திருடர்களை பல மைல் தூர துரத்தலுக்குப் பின்னர் மக்கள் சுற்று வளைத்துப் பிடித்தனர்.
3 திருடர்களையும் ஊருக்குள் இழுத்து வந்த பொது மக்கள் தூணில் கட்டி வைத்து சரமாரியாக உதைத்தனர். ஆண்களும்பெண்களும் சிறுவர்களும் சேர்ந்து கொண்டு மானாங்கண்ணியாக அடித்துத் துவைத்தனர்.
இதில் மூவருக்கும் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மூவரையும் குற்றுயிரும் குலையுயிருமாக தரதரவென இழுத்துக்கொண்டு வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications