சமஸ்கிருதத்துக்கு அத்வானி ஆதரவு
அகமதாபாத்:
குஜராத்தில் முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி முன்னிலையில் சமஸ்கிருத மொழியில் நடந்த நிகழ்ச்சியைநிறுத்தச் சொல்லி கூட்டத்தில் இருந்தவர்கள் குரல் கொடுத்தனர். இதையடுத்து குஜராத்தி மொழியில் அந் நிகழ்ச்சிநடத்தப்பட்டது.
விஸ்வ இந்து பரிஷத் நிறுவனர்களில் ஒருவரான சாஸ்திரியின் 100வது பிறந்த நாள் விழா அகமதாபாத்தில்நடந்தது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அத்வானி ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி முழுக்க, முழுக்கசமஸ்கிருதத்தில் நடந்தது.
பேச்சுக்கள் எல்லாமே சமஸ்கிருதத்தில் இருந்தன. நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது எழுந்த ஒரு பெரியவர்,நிகழ்ச்சிகளை குஜராத்தி மொழியில் நடத்துங்கள், சிலருக்கு மட்டுமே புரியும் சமஸ்கிருதத்தில் ஏன் நடத்துகிறீர்கள்?என்றார்.
அவரது கருத்தை ஆதரித்து பலரும் குரல் தந்ததனர். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசியவர்களின் பேச்சுக்கள்குஜராத்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டன.
அப்போது மேடையில் இருந்த பா.ஜ.கவினர் சிலர், சமஸ்கிருதத்துக்கு எதிராகக் குரல் கொடுத்த அந்த நபர்கம்யூனிஸ்ட்டாகவோ அல்லது போலி மதசார்பின்மை இல்லாதவராகவோ இருக்கலாம் என்றனர்.
பின்னர் பேசிய அத்வானி, மலேசியாவில் எம்.ஏ. படிப்பில் சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாக உள்ளது. ஆனால்,நம் நாட்டில் அதைப் பற்றி சிந்திக்கக் கூட முடியாது.
சமஸ்கிருத்தை கட்டாய பாடமாக்கினால், நாடு முழுவதும் அதற்கு எதிராக போராட்டம் நடத்துவார்கள்.கல்வியையே காவியமயமாக்குகிறோம் என்பார்கள் போலி மதசார்பின்மைவாதிகள் என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications