மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கிடு கிடு உயர்வு
சேலம்:
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்துள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
மேட்டூர் அணைக்கு சமீப வாரங்களாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து விட்டது. இந் நிலையில் ஆடிப் பெருக்குதிருவிழாவை முன்னிட்டு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர் இருப்பு 75 அடியிலிருந்து 70அடியாகக் குறைந்தது.
நீர் இருப்பு தொடர்ந்து குறைந்தால் காவிரி பாசனப் பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்ற கவலையில் பொதுப்பணித்துறைஅதிகாரிகளும், விவசாயிகளும் இருந்து வந்தனர்.
இந்தச் சூழ்நிலையில் கர்நாடகத்தில் கன மழை பெய்யத் தொடங்கியது. இந்த கன மழை காரணமாக கபினி அணையிலிருந்து அதிகதண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 3,000 கன அடியிலிருந்து 12,678 கன அடியாகஅதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையில் தற்போது 33 டிஎம்சி தண்ணீர் உள்ளது. இன்னும் 3 டிஎம்சி அளவுக்கு ஆடிப் பெருக்கு விழாவுக்கு தண்ணீர்திறந்துவிடப்பட வேண்டும். எனவே அடுத்த சில நாட்களில் அணையின் நீர் இருப்பு 30 டிஎம்சியாக குறையும். அதேசமயம், அணைக்குதொடர்ந்து நீர் வரத்து இருந்தால் இந்தக் குறைவை சமாளிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
தொடர் மழை காரணமாக அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீன் அளவு விநாடிக்கு 12,000 கன அடி நீர் என்ற அளவு தற்போது7,000 கன அடியாக குறைக்கப்பட்டு விட்டது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications