இந்து, முரசொலி மீதான தண்டனைகள் வாபஸ்
சென்னை:
உரிமை மீறல் பிரச்சனை தொடர்பாக இந்து, முரசொலி நாளிதழ்களின் ஆசிரியர்கள், நிருபர்களைக் கைது செய்யபிறப்பித்த உத்தரவை தமிழக சட்டமன்றம் இன்று வாபஸ் பெற்றது.
கடந்த ஆண்டு நவம்பர் 7ம் தேதி இந்து, முரசொலி பத்திரிக்கைகள் சட்டமன்ற உரிமையை மீறிவிட்டதாகக் கூறி அதன் இந்து ஆசிரியர் ராம்,பதிப்பாளர் பார்த்தசாரதி, நிருபர்கள் உள்ளிட்ட 5 பேரையும் முரசொலி ஆசிரியர் செல்வத்தையும் கைது செய்து 15 நாள் சிறையில்அடைக்க சபாநாயகர் காளிமுத்து உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கு தமிழக அரசுக்கு தேசிய அளவில் கண்டனம் எழுந்தது. இந்தக் கைது உத்தரவை எதிர்த்தும், தங்கள் மீது உரிமைப் பிரச்சனை கிளப்பசட்டமன்றக்குக்கு அதிகாரம் உண்டா என்று கேள்வி எழுப்பியும் இந்து ஆசிரியர் ராம், முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அரசியல் சட்டத்தின் 19வது பிரிவு அளித்திருக்கும் கருத்து சுந்திரத்தை சட்டமன்றத்தின் 194(3)வது பிரிவு பறிப்பதாக இந்து ராம் தனதுமனுவில் தெரிவித்துள்ளார். அரசியல் சட்டக் கேள்விகள் நிறைந்த இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட பெஞ்ச் விசாரணைக்குமாற்றுவதாக தலைமை நீதிபதி லஹோட்டி இரு தினங்களுக்கு முன் அறிவித்தார்.
இந் நிலையில் அவை முன்னவரும் நிதியமைச்சருமான பொன்னையன் இந்து, முரசொலி நாளிதழ்கள் மீதான தண்டனையை ரத்து செய்யும்தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இத் தீர்மானம் குரல் வாக்கு மூலம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தைக் கொண்டு வந்த பொன்னையன் பேசுகையில்,
மாநிலத்தின் நலனையும் மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு பத்திரிக்கைகள் நடு நிலையுடன் சட்டமன்ற செய்திகளை வெளியிடவேண்டும். சட்ட மன்றத்தில் நடப்பதை அப்படியே எழுத வேண்டும். சொந்த விருப்பு, வெறுப்புளை செய்திகளில் சேர்க்கக் கூடாது.
தவறான செய்திகள் பிரசுரமாகக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காத் தான் சட்டமன்ற விதிமுறைகள் உள்ளன. அதை பத்திரிக்கைகள் பின்பற்ற வேண்டும். இனிமேல் இந்து உள்ளிட்ட நாளிதழ்களும் டிவிக்களும் நியாயமான முறையில் செய்திகளை வெளியிடும் என்றுநம்புகிறோம்.
இந்த நம்பிக்கையின் அடிப்படையில் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட உரிமை மீறல் தொடர்பான தண்டனைகளை ரத்து செய்யும்தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்றார்.
-
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications