மதுரை வங்கிகளில் ப.சிதம்பரம் நேரில் ஆய்வு
கொடைரோடு:
இன்று மதுரை மற்றும் கொடைரோடு ஆகிய இடங்களில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்,அங்குள்ள பொதுத்துறை வங்கிகளில் திடீர் ஆய்வு நடத்தினார். வங்கிகளில் பொது மக்கள்,விவசாயிகள், மாணவர்கள் கடன் பெறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்துக் கேட்டறிந்தார்.
அப்போது மாணவர்களுக்கு தொழில் கல்வியில் உயர் படிப்புக்காக கடன் வழங்க வங்கிகள் அதிககெடுபிடி காட்டுவது குறித்து அதிகாரிகளை அவர் கடிந்து கொண்டார்.
மாணவர்களுக்குக் கடன் வழங்க சூரிட்டி ஜாமீன் கோரி கட்டாயப்படுத்தக் கூடாது என வங்கிஅதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர், இந்தக் கடனுக்கு ஈடாக மாணவர்களிடமும் அவர்களுக்குஉத்தரவாதம் வழங்கியவர்களிடமும் வாங்கப்பட்ட சொத்துக்களின் ஆவணங்களைத் திருப்பித்தருமாறும் உத்தரவிட்டார்.
அதே போல அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே உயர் கல்விக்கு கடன் தரப்படும்என்று அதிகாரிகள் நிபந்தனை விதிக்கக் கூடாது என்றும் கூறிய சிதம்பரம், எத்தனை பேர் கல்விக்காககடன் கோரினர், எத்தனை பேருக்கு கடன் வழங்கப்பட்டது ஆகிய விவரங்களை கேட்டறிந்தார்.
பெரும்பாலான வங்கி அதிகாரிகள், கல்விக்குக் கடன் குறித்து தங்களுக்குத் தெரியாது என்று பதில்தந்தபோது, அவர்களை சிதம்பரம் கடிந்து கொண்டார். அதிகபட்சமாக மருத்துவ, பொறியியல் கல்விஉள்ளிட்ட தொழில் கல்விக்குரூ. 7.5 லட்சம் வரை கடன் வழங்கலாம் என்பதை விளக்கிய சிதம்பரம்,மாணவர்களின் கல்விக்கு வங்கிகள் உதவ வேண்டியது கடமை என்றார்.
அதே போல விவசாயிகள், பொது மக்கள் கடன் பெறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் விவாதித்தார்அவர் பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், கடந்த 18ம் தேதி புதிய விவசாயக் கடன் கொள்ளைஅறிவிக்கபட்டுள்ளது.
அது எந்த அளவுக்கு வங்கிகளால் அமலாக்கப்படுகின்றன என்பதை நானும் நிதித்துறைஇணையமைச்சர் பழனி மாணிக்கமும் அடிக்கடி இதுபோல வங்கிகளில் ஆய்வு நடத்துவோம்என்றார்.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications