இராக்: அத்வானி, அமைச்சர் ஆலோசனை
டெல்லி - குவைத்:
இராக் தீவிரவாதிகள் கடத்திச் சென்ற 3 இந்தியர்கள் உட்பட 7 பிணைக் கைதிகள் விரைவில்விடுவிக்கப்படுவார்கள் என்று அவர்களை வேலைக்கு அமர்த்திய குவைத் லாரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ராணா அபு சைனே கூறுகையில், பிணைக்கைதிகளை விடுவிப்பதுதொடர்பான பேச்சுவார்த்தையின் இறுதிக் கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். விரைவில் அவர்கள்விடுவிக்கப்படுவார்கள் என்று நம்புகிறோம் என்றார்.
அதே நேரத்தில் பிணைக் கைதிகளை விடுவிக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும்,யார், யார் மூலமாக பேச்சுவார்த்தை நடக்கிறது என்பதையும் கூற மறுத்து விட்டார்.
முன்னதாக துபாய் தொலைக்காட்சிக்கு சைனே அளித்த பேட்டியில், இராக் தீவிரவாதிகள் விதித்த நிபந்தனைகள்அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாகவும், தீவிரவாதிகளுடனான பேச்சுவார்த்தையில் பாதியில் விலகிய அல்துலாய்மியை மீண்டும் பேச்சுவார்த்தையை நடத்துமாறு கேட்டுக் கொள்ள ஒரு பிரமுகர் பாக்தாத்துக்குஅனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அதே நேரத்தில் வேறு சில மத்தியஸ்தர்கள் மூலமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந் நிலையில் முன்னாள் துணைப் பிரதமர் அத்வானியை வெளியுறவுத்துறை இணையமைச்சர்அஹமத் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். பிணைக் கைதிகள் விவகாரம், அதை அரசு கையாண்டுமுறை குறித்து மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் என்ற முறையில் அத்வானியிடம் அஹமத்விளக்கினார்.
அத்வானியில் இல்லத்தில் நடந்த இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேச அஹமத்மறுத்துவிட்டார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications