நிர்வாகத் தீர்ப்பாயம்: தமிழக அரசுக்கு எதிராக வழக்கு
டெல்லி:
நிர்வாகத் தீர்ப்பாயத்தை கலைப்பது என்ற தமிழக அரசின் கொள்கை முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் முடிவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது நிர்வாகத் தீர்ப்பாயத்தை கலைக்கும் அரசின்கொள்கை முடிவுக் குறிப்பு அவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தொழிலாளர் பிரச்சினைகளைக் கவனிக்க தற்போது தீர்ப்பாயம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகிய 3அமைப்புக்கள் உள்ளன. இனி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகிய இரு அமைப்புக்கள் மட்டுமேபோதுமானது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந் நிலையில் தமிழக அரசின்முடிவை எதிர்த்து சென்னை சர்வீஸ் பார் அசோசியேஷன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
மாநில நிர்வாகத் தீர்ப்பாயத்தின் முன்பு சுமார் 30,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிர்வாகத் தீர்ப்பாயம்கலைக்கப்பட்டால் அந்த வழக்குகள் நேரடியாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதனால்விரைவில் நிவாரணம் கிடைக்காது.
அரசு ஊழியர் பணிநீக்க விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, டெஸ்மா சட்டத்தின் அதிகாரம்குறித்த மனுக்களை நீர்வாகத் தீர்ப்பாயம்தான் விசாரிக்க முடியும். தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள இடங்களைநிரப்புவதாகவும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. ஆனால், அரசு தனது உறுதிமொழியில் இருந்துபின்வாங்கி தற்போது தீர்ப்பாயத்தையே ஒழிக்க முடிவெடுத்துவிட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் இருக்கும்போது, மாநில அரசு ஊழியர்களுக்கு அந்தஉரிமை மறுக்கப்படுவது பாரபட்சமான நடவடிக்கையாகும்.
எனவே, மாநிலத் தீர்ப்பாயத்தை ஒழிக்கும் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். அதில் காலியாகஉள்ள இடங்களை உடனே நிரப்ப உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு, வழக்கறிஞர் நந்தகுமார் கோரிக்கைவிடுத்தார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான பெஞ்ச், இதேபோன்ற ஒரு வழக்கை விசாரித்து வருவதாகவும், அந்தபெஞ்ச் முன்னிலையில் கோரிக்கை வைக்குமாறு நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையிலான பெஞ்ச்அறிவுறுத்தியது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications