பாதுகாப்பு அமைச்சரின் அறையில் தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நாடாளுமன்றக் கட்டடத்தின் ஒரு பகுதியான செளத் பிளாக்கில் பாதுகாப்பு அமைச்சரின் அறையைஒட்டிய அறையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.
அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அறையை ஒட்டிய பாதுகாப்பு அமைச்சக அறையில் காலை 10.15மணியளவில் இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ள தீயணைப்புவண்டிகளில் நான்கு வண்டிகள் விரைந்து வந்து உடனடியாகத் தீயை அணைத்தன.
மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்தபோதுஅமைச்சர் அங்கில்லை.
செளத் பிளாக்கில் தான் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரின் அறைகளும் உள்ளன.












Click it and Unblock the Notifications