அமைச்சரவைக் கூட்டம்: பொடா ரத்தாகிறது
டெல்லி:
பொடா சட்டத்தை ரத்து செய்யும் மசோதாவை தாக்கல் செய்வது குறித்து இன்று மத்தியஅமைச்சரவை கூடி விவாதிக்கிறது.
மாலையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் தலைமையில் இக் கூட்டம் நடக்கிறது. அடுத்த வாரம்கூடும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொடா ரத்து மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.
அதே நேரத்தில் இப்போதுள்ள தீவிரவாத எதிர்ப்பு சட்டங்களை கடுமையாக்கவும்,தீவிரவாதத்துகுக்கு நிதியுதவி செய்வோரை கடுமையாக தண்டிக்க புதிய சட்டத் திருத்தம் கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பொடா சட்டத்தை ரத்து செய்யும் மசோதாவை தாக்கல் செய்யாவிட்டாலும் அக்டோபருடன் அந்தச்சட்டத்தின் ஆயுட் காலம் தானாகவே முடிவுக்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெவுக்கு வேறு வழியில்லை- கருணாநிதி
பொடா சட்டம் வாபஸ் பெறப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்திட்டவட்டமாக அறிவித்ததால் தான் வேறு வழியில்லாமல் வைகோ மீதான வழக்கை முதல்வர்ஜெயலலிதா வாபஸ் பெற்றுள்ளார் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
வைகோ மீதான பொடா வழக்கு வாபஸ் குறித்து அவர் கூறியதாவது:
பொடாவை கட்டி அழுத ஜெயலலிதா, இதை வைத்து பல கொடுமைகளை அரங்கேற்றினார். அதற்குஎன்னென்னவோ நியாயம் கற்பித்துப் பார்த்தார். ஆனால், அவரது வாதங்கள் எங்கும்செல்லுபடியாகவில்லை.
இந் நிலையில் பொடாவை நீக்குவோம் என நேற்று மத்திய அமைச்சர் பாட்டீல் திட்டவட்டமாகக்கூறிவிட்டார்.
இதையடுத்து வைகோ மற்றும் மதிமுகவினர் மீதான வழக்குகளை வாபஸ் பெறஉத்தரவிட்டிருக்கிறார். வைகோவும் அந்த 8 பேரும் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் கொடுமைஅனுபவித்தார்களே, அதற்கு இந்த ஜெயலலிதா என்ன பதில் சொல்லப் போகிறார்? என்று கேட்டார்கருணாநிதி.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications