வேலூர்: லாரி-வேன் மோதலில் 8 பேர் பலி
வேலூர்:
வேலூர் அருகே லாரி, வேன் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் வேனில் பயணம் செய்த 8 பேரும் சம்பவஇடத்திலேயே பலியானார்கள்.
பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஒரு ஆம்னி வேனில் 8 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். வேலூரில்இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இரையான்காடு என்ற இடத்துக்கு எதிரே வேன் வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியது.
மோதிய வேகத்தில் ஆம்னி வேன் அப்பளமாக நொறுங்கியது. இந்த விபத்தில் வேனில் இருந்த டிரைவர் உள்பட 8பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இறந்தவர்களில் 5 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள்.
இதில் ஒருவர் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் என்பது அவரது அடையாள அட்டை மூலம் தெரிய வந்தது.விபத்து பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பலியான 8 பேர் உடல்களையும் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேனில் இருந்த 8பேருமே பலியாகி விட்டதால் அவர்களைப் பற்றிய விவரம் தெரிய வரவில்லை. போலீஸார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
லாரி வேலூரில் இருந்து திருப்பத்தூருக்கு சென்று கொண்டிருந்தது. விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications