நீதிமன்ற விவகாரம்: கலாமை சந்திக்கிறது திமுக
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம் தொடர்பாக ஜனாதிபதி அப்துல் கலாமைசந்தித்து திமுக கூட்டணி எம்.பிக்கள் மனு அளிக்க இருப்பதாக கருணாநிதி தெரிவித்தார்.
மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு ரிட் மனுவை விசாரிக்கும் அதிகாரம் வழங்கக் கூடாது, திருச்சி,கரூர், தஞ்சாவூர் மாவட்டங்களை சென்னை நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கவேண்டும் என உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்து போராட்டங்கள் நடத்திவருகின்றனர்.
இதை எதிர்த்து மதுரை வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, மதுரை இருமாவட்ட வழக்கறிஞர்களுமே தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியை இடமாற்றம் செய்ய வேண்டும்என்று கோருகின்றனர்.
சுபா.ஷன் ரெட்டியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை திமுகவும் ஆதரிப்பதாகத் தெரிகிறது.
இந் நிலையில் திமுக எம்.பிக்களுடன் இன்று காலை ஆலோசனை நடத்திய கருணாநிதி பின்னர் நிருபர்களிடம்கூறியதாவது:
வழக்கறிஞர்கள் போராட்டத்தால் உயர் நீதிமன்றத்தின் செயல்பாடு முடங்கிப் போயுள்ளது. இதில் ஜனாதிபதிதலையிட்டு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுக்கவுள்ளோம். அது தொடர்பாக ஜனாதிபதி அப்துல்கலாமை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி எம்.பிக்கள் விரைவில் சந்தித்து மனு அளிப்பர்.
அதே போல பிரதமர் மன்மோகன் சிங்கையும், சட்ட அமைச்சரையும் சந்தித்து மனு கொடுப்போம் என்றார்.
வழக்கறிஞர்களின் போராட்டம் சரியா என்று கேட்டபோது, போராட்டம் நடத்த வேண்டிய அளவுக்கு அவர்களைதள்ளியதும் சரியல்ல என்றார் கருணாநிதி.
வழக்கறிஞர்களின் எந்தெந்த கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றுகேட்டபோது, எளிதாக நிறைவேற்றக் கூடிய கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்றார்.
மேலும் அவர் பேசுகையில், பொடா சட்டத்தை நீக்கும் மத்திய அரசின் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications