தூக்கில் போடப்பட்டான் தனஞ்செய்
கொல்கத்தா:
பள்ள்ச் சிறுமியை கற்பழித்துக் கொலை செய்த தனஞ்சய் சாட்டர்ஜி இன்று காலை 4.30 மணிக்கு கொல்கத்தாவில்உள்ள அலிப்பூர் மத்திய சிறையில் தூக்கில் போடப்பட்டான்.
இந்தியாவில் தூக்கில் போடப்பட்டுள்ள 55வது குற்றவாளியாவான் தனஞ்செய்.
இந்தத் தூக்கு தண்டனையை எதிர்த்து மனித உரிமை அமைப்புகள் கொல்கத்தாவில் மெழுகுவர்த்திகளை ஏந்திஅமைதிப் பேரணி நடத்தினர்.
கொல்கத்தாவைச் சேர்ந்த ஹெதல் பரேக் என்ற பள்ளிச் சிறுமியை தனஞ்செய் கடந்த 1990ம் ஆண்டில் கற்பழித்து,கொலையும் செய்தான். ஆனந்த் அபார்ட்மெண்ட் என்ற அடுக்கு மாடிக் குடியிருப்பில் லிப்ட் மேன் மற்றும்காவலனாக பணியாற்றி வந்தான் தனஞ்செய்.
அப்போது அபார்ட்மெண்ட்டில், வீட்டில் தனியே இருந்த ஹேதலை தனஞ்செய் நாசமாக்கினான்.
ஆனால், 14 ஆண்டுகளாக இந்த வழக்கு பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணையிலும், மேல் முறையீடுகளிலும்சிக்கி இருந்தது. அவனது தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துவிட்ட நிலையில், ஜனாதிபதி அப்துல்கலாமும் அவனது கருணை மனுவை நிராகரித்ததால் தண்டனை இன்று நிறைவேற்றப்பட்டுவிட்டது.
தூக்கில் போடப்பட்ட அவனது உடலைப் பெற உறவினர்கள் முன் வராததால், இந்து சத்கார் சமிதி என்றஅமைப்பிடம் எரியூட்டுவதற்காக ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக போஸ்ட் மார்ட்டமும் செய்யப்பட்டது.
தூக்கிலிடப்படுவதற்கு முன்னதாக அவனது இறுதி ஆசைப்படி அவனுக்கு தயிரும், இனிப்புகளும் வழங்கப்பட்டன.பின்னர் புதிய சட்டை, பைஜாமா அணிவிக்கப்பட்டு தூக்கு மேடைக்கு தனஞ்செய் கொண்டு வரப்பட்டான்.
துக்கில் 30 நிமிடங்கள் தொங்கவிடப்பட்ட பிறகு உடலை மருத்துவர்கள் சோதித்து இறந்துவிட்டதாகசான்றழித்தனர். இதையடுத்தே உடல் கீழே இறக்கப்பட்டது.
தூக்கில் போடப்படுவதற்கு முன் தனஞ்செய் மிகவும் அமைதியாகவும் இயல்பாகவும் காணப்பட்டதாகவும்,அதிகாலையில் எழுந்து குளித்து, பூஜை செய்துவிட்டு தானாகவே தூக்கு மேடைக்கு நடந்ததாகவும் அதிகாரிகள்தெரிவித்தனர்.
மேலும் அவனைக் காண நின்றிருந்த சக கைதிகளை வாழ்த்திவிட்டு தனஞ்செய் தூக்கி மேடை பகுதிக்குச்சென்றுள்ளான்.
இதற்கிடையே அவனால் கொல்லப்பட்ட மாணவி ஹேதல் பரேக் பயின்ற கோல்ட்ஸ்மித் பள்ளியில்ஹேதலுக்காகவும், தனஞ்செய்க்காகவும் சிறப்பு அஞ்சலி பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.
ஹேதலின் ஆன்மா சாந்தியடையவும், தனஞ்செயின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கவும் இந்தபிரார்த்தனைகளை நடத்தியதாக பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.
இதற்கிடையே தூக்கில் போடப்பட்ட தனஞ்செயின் கிராமமான குலுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. தனது மகனுக்காக தந்தையும் தாயாரும் நேற்றிரவில் இருந்தே கதறி அழுதபடி இருந்தனர்.அதே போல தனஞ்செயின் மனைவியும் கதறியபடி இருந்தார்.
தங்கள் மகன் கற்பழிப்பிலோ, கொலையிலோ ஈடுபட்டிருக்கவே முடியாது என அவரது பெற்றோர் தொடர்ந்துகூறியபடி இருந்தனர். தூக்கில் போடப்படுவதை எதிர்த்தே அவனது உடலை நாங்கள் பெறவில்லை என்றும்தெரிவித்தனர்.
தனஞ்செயை காப்பாற்றுவதற்காக தங்களது சிறிய நிலத்தையும் விற்று கடைசி வரை அவரது குடும்பம் போராடியதுகுறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications