குட்டி சாமியாரை கடத்த ஆதீனம் முயற்சி?
சேலம்:
சேலம் குட்டிச் சாமியார் பரணீதரனைக் கடத்தி அவருக்கு இளவரசு பட்டம் சூட்ட முயற்சிப்பதாக மதுரைஆதீனத்தின் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் தனது இளைய ஆதீனம் சாமிநாதனை அந்தப் பொறுப்பில் இருந்து மதுரை ஆதீனம் நீக்கினார். இதைஎதிர்த்து சாமிநாதன் நீதிமன்றத்தில் வழக்கத் தொடர்ந்துள்ளார்.
சேலம் குட்டி சாமியாரை சந்தித்ததில் இருந்து தன்னை மதுரை ஆதீனம் வெறுத்து, ஒதுக்க ஆரம்பித்துவிட்டதாகவும்,இளைய ஆதீனமாக குட்டிச் சாமியாரைக் கொண்டு வர ஆதீனம் முயல்வதாகவும் இளைய ஆதீனம் குற்றம்சாட்டியுள்ளார்.
இந் நிலையில், சேலம் குட்டி சாமியாரை மதுரை ஆதீனம் கடத்த முயற்சிப்பதாக செய்திகள வெளியாகின.இதனையடுத்து சேலத்தில் வழக்கமாக தான் தங்கியிருக்கும் இடத்தை விடுத்து, சேலத்தின் மையப்பகுதியானராமகிருஷ்ணா பூங்கா பகுதியில் உள்ள ஒரு பங்களாவுக்கு குட்டி சாமியார் இடம் மாறியுள்ளார். அங்கு பலத்தகாவலும் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து குட்டி சாமியார் அளித்த பேட்டியில்,
என்னை கடத்த முயற்சி நடப்பதாக செய்தி வந்துள்ளது. ஆனால் என்னை பாதுகாக்க ஆட்கள் இருக்கிறார்கள்.சாயிபாபா இருக்கிறார். இவ்வளவையும் மீறி என்னை கடத்த முடியுமா?
மதுரை ஆதீனத்தை நான் மதிக்கவில்லை என்று அவர் கூறினாராம். பின்னர் நான் மதுரை ஆதீனத்தைதொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் எனது குடும்ப பிரச்சினையை தீர்த்து வைத்ததைநினைத்துப் பார்க்க சொன்னார்.
நான் மதுரை ஆதீனத்தின் இளவரசுப் பட்டத்தை சூட விரும்பவில்லை. என் பாதை தனியாகும் என்றார்.
குட்டிச் சாமியாரை வைத்து தனி ஆஸ்ரமம் நடத்தி வரும் பிரமுகர்கள், அவரை மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில்ஒப்படைக்க விரும்பவில்லை என்று தெரிகிறது. அவர் இளைய ஆதீனம் ஆகிவிட்டால் தங்கள்கட்டுப்பாட்டைவிட்டு குட்டிச் சாமியார் போய்விடுவார் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
ஆனால், இவர்களது கட்டுப்பாட்டில் இருந்து குட்டிச் சாமியாரை மீட்டு அவரை இளைய சன்னிதானமாக்க மதுரைஆதீனம் முயல்வதாகவும் கூறப்படுகிறது.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications