தேசிய கொடியை அவமதித்த வெங்கையா நாயுடு
சென்னை:
பாஜக கொடிக் கம்பத்தில், தேசியக் கொடியை ஏற்றி தேசியக் கொடியை அவமதித்து விட்டதாக அக் கட்சியின்தலைவர் வெங்கையா நாயுடு மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
வெங்கையா நாயுடு நேற்று சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் தேசியக் கொடிஏற்றினார். உச்சியில் பா.ஜ.கவின் தாமரைச் சின்னம் கொண்ட, பா.ஜ.க கொடியின் வர்ணம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை நாயுடு ஏற்றினார்.
இது தொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் சுபாஷ் சந்திரபோஸ், பரணீதரன் ஆகிய இரு இளைஞர்கள் புகார்கொடுத்துள்ளனர். அதில், பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த கொடியேற்றும் நிகழ்ச்சியில், பாஜக வண்ணம்பூசப்பட்ட கொடிக் கம்பத்தில், தேசியக் கொடியை ஏற்றியுள்ளார் வெங்கையா நாயுடு.
மேலும் கொடியின் உச்சியில் தாமரைச் சின்னமும் உள்ளது. ஏற்கனவே பறந்து கொண்டிருந்த பாஜக கட்சிக்கொடியை கழற்றி விட்டு அதற்குப் பதில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர். இது தேசியக் கொடியைஅவமதிக்கும் செயல், குற்றச் செயல். இதற்கான ஆதாரமாக வீடியோ பதிவு வைத்துள்ளோம்.
எனவே வெங்கையா நாயுடு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் இரு இளைஞர்களும்கோரியுள்ளனர்.
இதுதொடர்பாக புகாரைப் பதிவு செய்துள்ள மாம்பலம் போலீஸார் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து விட்டுமேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம்












Click it and Unblock the Notifications