ஒலிம்பிக்: முதல் சுற்றில் பயஸ், பூபதி இணை வெற்றி
ஏதென்ஸ்:
ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் –இந்தியாவின் பயஸ், பூபதி இணைஇரண்டாவது சுறுக்கு முன்னேறியுள்ளது.
அமெரிக்காவின் ஆண்டி ரோடிக், மார்டி பிஷ் இணையை எதிர்த்து விளையாடிய லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதிஇணை 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
ஹாக்கியில் தோல்வி:
ஹாக்கிப் போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் 1-3 என்ற கோல் கணக்கில் நடப்புச் சாம்பியன் ஹாலந்திடம்இந்தியா தோற்றது.
ஆட்டத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை ஹாலந்து வீரர்களே முன்னிலை வகித்தனர்.
முதல் பாதியில் ஒரு கோலும், இரண்டாவது பாதியில் இரண்டு கோல்களும் ஹாலந்து அடித்தது. ஆட்டத்தின் 69வதுநிமிடத்தில் இந்திய வீரர் ககன் அஜித் சிங் ஒரு கோல் அடித்தார். இதன்பிறகு இந்திய வீரர்களால் கோல் எதுவும்அடிக்க முடியவில்லை.
இதனால் 3-1 என்ற கோல் கணக்கில் ஹாலந்து வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் இந்தியாவுக்குகிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சந்தீப் சிங்க சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
நாளை 8.30 மணிக்கு (இந்திய நேரம்) நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவைச்சந்திக்கிறது.
துப்பாக்கி சுடுதலிலும் தோல்வி:
அதே போல, ஆண்களுக்கான "டிராப் பிரிவு துப்பாக்கி சுடுதலில், இந்திய வீரர்கள் மன்ஷேர் சிங், மனவ்ஜித் சிங்சாந்து ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினர்.
பதக்கப் பட்டியல்:
பதக்கப் பட்டியலில் சீனா 5 தங்கங்களை வென்று முதலிடத்தைப் பெற்றுள்ளது.
நாடுகள் பெற்ற பதக்கங்கள்:
1. சீனா- 5 தங்கம்- 2 வெள்ளி- 1 வெண்கலம்
2. ஆஸ்திரேலியா 4- 1- 3
3. ஜப்பான் 4- 1- 0
4. இத்தாலி 2- 1- 0
5. துருக்கி 2- 0- 1
5. உக்ரைன் 2- 0 -1
6. அமெரிக்கா 1- 4- 3
7. ரஷ்யா 1- 3 -2
8. பிரான்ஸ் 1- 2- 2
9. ஹங்கேரி 1- 1- 1
இந்தியா இதுவரை ஒரு பதக்கம் கூட பெறவில்லை.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications