விநாயகர் ஊர்வல கட்டுப்பாடுகள்: பாஜக எதிர்ப்பு
சென்னை:
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு போலீசார் கட்டுப்பாடுகள் விதிப்புது தேவையற்றது என அகில இந்திய பாஜகசெயலர் இல. கணேசன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பாமக நிறுவனர் ராமதாசும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவனும் ஒரேமேடையில் பேசியுள்ளனர். சாதி ரீதியான மோதலுக்குக் காரணமான அமைப்புகளின் தலைவர்கள் ஒரேமேடையில் தோன்றியதை வரவேற்கிறோம். இனி அவர்களுக்குள் இந்தக் கூட்டணி தொடர வேண்டும்.
பாஜகவுடன் இனி ஒரு போதும் கூட்டு சேர மாட்டேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார். அந்த சபதத்தை அவர்உறுதியாகத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது தேவையற்ற கசப்புணர்ச்சியை உண்டாக்கும்.சர்ச்சைக்குரிய இடங்கள் என்று கருதப்படும் இடங்களில் முஸ்லீம் தலைவர்களே முன் வந்து ஊர்வலம் செல்வதில்ஆட்சேபணை இல்லை என்று கூறி ஒற்றுமை ஏற்பட உதவ வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேசியக் கட்சி என்ற அங்கீகாரத்தை ரத்து செய்வது பற்றி தேர்தல் கமிஷன்நோட்டீஸ் அனுப்பியிருப்பது மகிழ்ச்சியான விஷயம்.
புதுச்சேரியை ஆளப் போவதாக சொல்லிக் கொண்டிருந்த பாமகவுக்கும் இப்போது அங்கு அங்கீகாரமேஇல்லாமல் போகப் போகிறது. இதேபோன்று அங்கீகாரத்தை இழக்கும் நிலை மார்க்சிஸ்ட் கட்சிக்கு வந்தது.அப்போது விதிகளைத் திருத்தியதால் இப்போது அங்கீகாரம் தொடர்கிறது. எனவே விதிகளைக் கடுமையாகஅமல்படுத்த வேண்டும்.
மதுக் கடைகளைத் தனியாரிடம் விட வேண்டும் என்பதற்காகத்தான், அவற்றை மூட வேண்டும் என்று பாமககோருகிறது. ஆனால் பாஜக, ஒட்டுமொத்த மதுவிலக்கை கோருகிறது என்றார் கணேசன்.












Click it and Unblock the Notifications