லண்டன் செல்ல போலி ஆவணங்கள்: மூவர் கைது
சென்னை:
சென்னையில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் போலியான ஆவணங்கள், மோசடி செய்யப்பட்டடி.டி. ஆகியவற்றைக் கொடுத்து லண்டன் செல்வதற்காக விசா பெற முயன்ற 3 வாலிபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இங்கிலாந்து செல்ல விசா கோரி டிப்ளமோ படித்த அருண் குமார் (25), மதியழகன் (25),பட்டதாரியான கயூம் கான் (34) ஆகிய மூவரும் விண்ணப்பித்திருந்தனர்.
இதையடுத்து மூவரிடமும் சென்னைத் துணைத் தூதரக அதிகாரிகள் நேர்காணல் நடத்தினர்.அப்போது மூவரும் லண்டனில் உயர் கல்வி பயிலுவதற்கான ஆவணங்களையும், ரூ. 3.25 லட்சம்மதிப்புள்ள 3 டி.டிக்களையும் சமர்ப்பித்தனர்.
ஆனால், அவற்றை தூதரக அதிகாரிகள் சோதனையிட்டபோது அவை போலியானவை என்றுதெரியவந்தது.
ரூ. 30 க்கு எடுக்கப்பட்ட மூன்று வங்கி டி.டிக்களையும் அவர்கள் ரூ. 3.25 லட்சமாகத்திருத்தியுள்ளனர். இதையடுத்து உடனடியாக காவல் நிலையத்தில் தூதரகம் புகார் கொடுத்தது.
இதைத் தொடர்ந்து அந்த மூன்று வாலிபர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீதுபோலி ஆவணங்கள் தாக்கல் செய்தல், மோசடி செய்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
மெட்ரோபாலிட்டன் நீதிபதி முன் மூவரையும் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள்நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications