தூக்கம் போட்ட போலீஸ்: தப்பி ஓடிய கைதிகள்
மதுரை:
பஸ்சில் பாதுகாப்புக்கு வந்த போலீசார் தூங்கியதால் கைதிகள் இருவர் தப்பியோடிவிட்டனர்.
நாகர்கோவிலைச் சேர்ந்த கஜேந்திரன், பெனிட், ராஜன் ஆகியோர் கொலை, கொள்ளை வழக்குகள் தொடர்பாககைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
வழக்கு விசாரணைக்காக அவர்கள் சென்னை நீதிமன்றத்துக்கு பஸ்சில் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களுக்குப்பாதுகாப்பாக நெல்லை ஆயுதப் படையைச் சேர்ந்த போலீசார் பரமசிவம், பிரேம்குமார் ஆகியோர் சென்றனர்.
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு இந்த கைதிகள் மூவரையும் போலீசார் மீண்டும்பாளையங்கோட்டைக்கு பஸ்சில் அழைத்து வந்து கொண்டிருந்தனர்.
அதிகாலையில் மதுரை அருகே பஸ் வந்து கொண்டிருந்தபோது இரு போலீசாரும் நன்றாக தூங்கிவிட்டனர்.கொட்டம்பட்டி அருகே பஸ் நின்றபோது, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ராஜனும், பெனிட்டும் பஸ்சில் இருந்துஇறங்கி தப்பியோடிவிட்டனர்.
பஸ் மதுரை பஸ் நிலையத்தில் நின்றபோது தான் போலீசாருக்கும் இன்னொரு கைதியான கஜேந்திரனுக்கும் தூக்கம்கலைந்தது. விழித்துப் பார்த்த அவர்கள் கைதிகள் இருவரும் தப்பிவிட்டதைக் கண்டு அதிர்ந்துபோய் டிரைவரிடம்விசாரித்தனர்.
அப்போது இரண்டு பேர் கொட்டம்பட்டியில் இறங்கியதாக டிரைவர் கூறினார்.
இதையடுத்து மீதியிருந்த கைதி கஜேந்திரனுடன் மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்துக்கு வந்த போலீசார்அவனை அங்கு ஒப்படைத்துவிட்டு, கைதிகள் தப்பிய விவரத்தை உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர்.
இவர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. பணியின்போது தூக்கம் போட்ட போலீசார் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications