உமா பாரதியை கைது செய்ய தனிப் படை
பெங்களூர்:
மத்தியப் பிரதேச முதல்வர் உமா பாரதியைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துள்ளதையடுத்து அவரைக் கைது செய்ய கர்நாடக தனிப் படை போலீசார் விரைவில்போபால் செல்கின்றனர்.
இத் தகவலை கர்நாடக டிஜிபி போர்கர் இன்று பெங்களூரில் நிருபர்களிடம் தெரிவித்தார். அவர்கூறுகையில், எஸ்.பி. ரூபா தலைமையில் இரு இன்ஸ்பெக்டர்கள், ஒரு பெண் சப் இன்ஸ்பெக்டர்ஆகியோர் போபால் செல்வர். தானாகவே சரணடைய விரும்பினால் செப்டம்பர் 19ம் தேதிக்குள்முதல்வர் உமா பாரதி நீதிமன்றத்தில் ஆஜராகலாம் என்றார்.
1994ம் ஆண்டில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள ஈத்கா மைதானத்தில் தடையுத்தரவையும்மீறி கொடி ஏற்றினார், அப்போது விஸ்வ இந்து பரிஷத் தலைவராகவும் பாஜக இளைஞரணித்தலைவராவகவும் இருந்த உமா பாரதி.
இதைத் தொடர்ந்து ஏற்பட்ட பயங்கர மதக் கலவரத்தில் 4 பேர் பலியாயினர். இந்த வழக்கில்சமீபத்தில் உமா பாரதிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தது ஹூப்ளி நீதிமன்றம்.
இதையடுத்து உமா ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கோரியது. ஆனால், பதவி விலகமாட்டேன் என உமா மறுத்தார். மத்திய அமைச்சரவையில் கிரிமினல் வழக்கில் தொடர்புடையஅமைச்சர்கள் இருப்பதாகக் கூறி நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்து வரும் பா.ஜ.கவுக்கு இந்தபிடிவாரண்ட் விவகாரம் பெரும் தர்ம சங்கடமாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் உமாசமர்பித்தார். உமாவுக்கு ஆதரவாக அவரது 24 அமைச்சர்களும் இன்று தங்களது பதவிகளைராஜினாமா செய்துவதாக அறிவித்துள்ளனர்.
இந் நிலையில் சென்னையில் நிருபர்களிடம் பேசிய வெங்கையா நாயுடு, இந்த விவகாரத்தைகாங்கிரஸ் தேவையில்லாமல் அரசியலாக்குகிறது. முதலில் உமா பாரதி மீதான வழக்குகளை வாபஸ்பெறப் போவதாக காங்கிரஸ் அரசு அறிவித்திருந்தது. ஆனால், அதைச் செய்யாமல் அவருக்குஎதிராக பிடிவாராண்ட் பெறப்பட்டுள்ளது. உமாவின் ராஜினாமா கடிதம் குறித்து கட்சியின்நாடாளுமன்றக் குழு கூடி முடிவு செய்யும் என்றார்.
அதே நேரத்தில் பிற மத்தியப் பிரதேச அமைச்சர்களின் ராஜினாமாக்களை நிராகரிப்பதாக பா.ஜ.க.அறிவித்துள்ளது.
இந் நிலையில் இன்று இந்தூரில் நிருபர்களிடம் பேசிய உமா பாரதி, என் மீதான வழக்கை கர்நாடககாங்கிரஸ் அரசு வாபஸ் பெற்றால் தான் எனது ராஜினாமாவைத் திரும்பப் பெறுவேன் என்றார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications