தேர்தலுக்கு தயாராகுங்கள்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக தொண்டர்கள் சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என அக் கட்சியின் தலைவர்கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற சேலம் திமுக சிறப்பு மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய கருணாநிதிகூறியதாவது:

இங்கே பேசியவர்கள் எல்லாம் அதிமுக ஆட்சியை 356வது பிரிவைப் பயன்படுத்தி கலைக்கவேண்டும் என்றார்கள். அப்படிச் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. தொடர்ந்து தவறுகளைமட்டுமே செய்து வரும் இந்த ஆட்சி தானாகவே போகும். அதற்கான நாளும் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

கடந்த ஒரு வருடத்தில் தமிழக சட்டசபை ஒரே ஒரு வாரம் தான் நடந்திருக்கிறது. இதன்மூலம்ஜனநாயகத்தையே ஜெயலலிதா கேவலப்படுத்தியுள்ளார். திமுக ஆட்சியில் பட்ஜெட் மீதானவிவாதத்தை மட்டும் நான் 50 நாட்கள் நடத்தியிருக்கிறேன்.

சட்டசபை, பாராளுமன்ற ஜனநாயகம் தானே இந்திய ஜனநாயகம். சட்டசபையையேநடத்தாவிட்டால் என்ன அர்த்தம்?.

இந்த ஆட்சியை கவர்னர் கலைக்க மாட்டார், ஜனாதிபதி கலைக்க மாட்டார். ஆனால், நாம்கலைப்போம். ஜெயலலிதாவுக்கு எதிராக மக்களைத் திரட்டி இந்த ஆட்சியை நாம் வீட்டுக்குஅனுப்புவோம். தமிழக மக்களோடு சேர்ந்து அந்த வேலையை நாம் பார்ப்போம்.

சட்டமன்றத் தேர்தல் 6 மாதத்திலும் வரலாம், ஒரு வருடம், இரண்டு வருடத்திலும் வரலாம். திமுகதொண்டர்கள் இப்போதே அதற்குத் தயாராகிவிடுங்கள். வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும்வேலைகளை இப்போதே தொடங்குங்கள். 100 சதவீத வெற்றியை மீண்டும் பெற்றுத் தாருங்கள்.

ஜனநாயகத்தை முடக்குவதில் பா.ஜ.கவும் சும்மா இல்லை. அத்வானியின் தலைமையில் பா.ஜ.க.நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கி ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி வருகிறது. துணைப்பிரதமரமாக இருந்து கொண்டே, இந்தியாவில் மதம் கலக்காத அரசியலே சாத்தியமில்லை என்றுசொன்னவர் இந்த அத்வானி.

அவரது பேச்சும் செயலும் தான் பாஜக கூட்டணியை விட்டு திமுக வெளியில் வந்ததற்கு முக்கியக்காரணம்.

திமுக எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல. இந்து மதத்துக்கும் எதிரியல்ல. ஆனால், இந்துத்துவகொள்கைகளைத் தான் எதிர்க்கிறோம். ஜாதியின் பெயரால் மனிதனை மனிதன் அடக்குவதைத் தான்எதிர்க்கிறோம். அதை எப்போதும் எதிர்ப்போம்.

மதவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் திமுக எப்போதும் கடுமையாக எதிர்க்கும் என்றார்கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+