பெங்களூர் விசாரணைக்கு தடை கோருகிறார் ஜெ
சென்னை:
காவிரி, வீரப்பன் விவகாரங்களால் கர்நாடகத்தில் தனக்கு எதிரான சூழல் நிலவுவதாகவும், இதனால் தன் மீதானசொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை பெங்களூரில் நடத்தினால் நியாயம் கிடைக்காது என்றும் முதல்வர்ஜெயலலிதா மீண்டும் கூறியுள்ளார்.
இதனால் பெங்களூரில் இந்த வழக்கு விசாரணை நடத்த தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒருமனு தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்குகள் தொடர்பான ஆவணங்களை ஒரு வாரத்துக்குள்கர்நாடக சிறப்பு நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று நேற்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டது.
இந் நிலையில் காவிரி விவகாரத்தால் கர்நாடகத்தில் தமிழகத்துக்கு எதிரான சூழல் நிலவுவதாகவும், குறிப்பாகதனக்கு எதிரான நிலைமை இருப்பதாகவும், இதனால் வழக்கு விசாரணையை பெங்களூரில் நடத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதே போன்ற கோரிக்கையுடன் ஏற்கனவே இரு முறை உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல்செய்திருந்தார். அதில் வழக்கு விசாரணையை பாண்டிச்சேரிக்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால்,அந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந் நிலையில் இன்று மீண்டும் வழக்கை கர்நாடகத்தில் நடத்த தடை கோரி மனு செய்துள்ளார்.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications