லாரிகள் வேலை நிறுத்தம்: உயர்கிறது விலைவாசி
சென்னை & டெல்லி:
நாடு தழுவிய அளவில் நடக்கும் லாரிகள் வேலை நிறுத்தம் இன்றோடு நான்காவது நாளை எட்டியுள்ளது.
சுமார் 30 லட்சம் லாரிகள் இயங்காததால் அத்தியாவசிப் பொருட்களின் சப்ளை பல பகுதிகளில்பாதிக்கப்பட்டுள்ளதோடு, காய்கறிகள் உள்ளிட்டவற்றின் விலைகள் உயர ஆரம்பித்துள்ளன. மேலும் ரேசன்கடைகளுக்கு உணவு தானியங்கள் உள்ளிட்ட சரக்குகள் கொண்டு செல்லப்படுவது நாடு முழுவதும்பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் லாரிகள் சர்வீசுக்கு 10 சதவீத சேவை வரி விதிக்கப்பட்டதைக் கண்டித்து இந்தப் போராட்டம்நடக்கிறது.
வெளி மாநிலங்களுக்கு பொருட்களை அனுப்புவதும், வெளி மாநில லாரிகள் வருவதும் அடியோடுநின்றுபோய்விட்டதால், தமிழகத்தில் லாரி புக்கிங் அலுவலகங்கள் எல்லாம் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
பால், காய்கறிகளின் சப்ளை பாதிக்கப்படாத வகையில் தான் இந்தப் போராட்டம் நடப்பதாகவும், மத்திய அரசுவளைந்து கொடுக்காவிட்டால் 2 நாட்களில் இந்தப் பொருள்களின் போக்குவரத்தையும் நிறுத்திவிடுவோம் என்றும்அகில இந்திய லாரி மோட்டார் காங்கிரஸ் அமைப்பு எச்சரித்துள்ளது.
சென்னை, தூத்துக்குடி உள்பட நாட்டின் அனைத்து துறைமுகங்களிலும் பணிகள் அடியோடு ஸ்தம்பித்துப்போயுள்ளன. துறைமுகங்களில் ஏகப்பட்ட சரக்குகள் தேங்கிக் கிடப்பதால், கரை சேர்ந்த பல கப்பல்களில் இருந்தும்பொருட்களை இறக்குவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கச்சாப் பொருட்களின் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளிலும் பணிகள்நின்றுபோய்விட்டன.
இந்தப் போராட்டத்தால் சராசரியாக நாடு முழுவதும் ஒரு நாளைக்கு ரூ. 500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது.
மத்திய வருவாய்த்துறைச் செயலாளருடன் லாரி உரிமையாளர்கள் நடத்திய இரு சுற்றுப் பேச்சும் தோல்விஅடைந்துவிட்டது. இதையடுத்து இனி நிதித்துறைச் செயலாளர் அல்லது நிதியமைச்சருடன் தான் பேச்சுநடத்துவோம் என லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தால் நாட்டின் பண வீக்க விகிதம் அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டுஏப்ரலில் 9 நாள் நடந்த லாரிகள் வேலை நிறுத்தத்தால் நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறை வளர்ச்சி 1.1 சதவீதம்சரிந்து பெரும் இழப்பு ஏற்பட்டது நினைவுகூறத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications