ஜெயலட்சுமி: 3 அமைச்சர்களின் பிஏக்கள் நீக்கம்
சென்னை:
ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்த 3 தமிழக அமைச்சர்களின் நேர்முக உதவியாளர்கள் திடீரெனசஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஜெயலட்சுமியுடன் போலீஸ் அதிகாரிகள் தவிர, தொழிலதிபர்கள் மற்றும் கோட்டையில் உள்ள சில முக்கியபிரமுகர்களும் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
அமைச்சர் தளவாய் சுந்தரத்தின் பி.ஏவான காஜா மொய்தீனுக்கும் தனக்கும் தொடர்பு இருந்ததாக தனது முதல்வாக்குமூலத்தில் ஜெயலட்சுமி தெரிவித்திருந்தார். இவர் ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்த நிலக்கோட்டைசப்-இன்ஸ்பெக்டர் ஷாகஜானின் மைத்துனர் ஆவார்.
இந்த இருவரும் சேர்ந்து தன்னை மும்பை விபச்சார விடுதியில் விற்க முயன்றதாகவும் ஜெயலட்சுமி கூறியுள்ளார்.
காஜா மொய்தீனைத் தவிர பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் பி.ஏவான ராமச்சந்திரன,போக்குவரத்துத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதத்தின் உதவியாளரான முத்து மாணிக்கம் ஆகியோருக்கும்ஜெயலட்சுமியுடன் தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து இந்த மூன்று பிஏக்களையும் தமிழக அரசு நேற்றிரவு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இதற்கானஉண்மையான காரணத்தை அரசு வெளியிடாவிட்டாலும், கடுமையான புகார்களின் காரணமாக இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
இந்த மூவரின் உதவியாலும் கோட்டையில் படு செல்வாக்காக வலம் வந்துள்ளார் ஜெயலட்சுமி. பல போலீஸ்அதிகாரிகளுக்கும் டிரான்ஸ்பர், போஸ்டிங் ஆகிய காரியங்களை சாதித்துத் தந்திருக்கிறார்.
கோட்டைக்கு பலமுறை போலீஸ் டிரஸ்சிலேயே போய் வந்துள்ளார் ஜெயலட்சுமி என்கிறார்கள்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications