பிரதமருக்கு காய்ச்சல்: சென்னை வருகை ரத்து
சென்னை:
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், இன்றிரவு சென்னை வரவிருந்த அவரதுபயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கல்பாக்கத்தில் அதிவேக அணு உலை கட்டுமானப் பணியை தொடங்கி வைக்க மன்மோகன் சிங் இன்றிரவு 9.30மணிக்கு சென்னை வர இருந்தார். இரவு ஆளுநர் மாளிகையில் தங்கிவிட்டு, நாளை காலை கல்பாக்கம் செல்லஇருந்தார். ஆளுநர் மாளிகையில், முதல்வர் ஜெயலலிதா அவரை சந்தித்துப் பேசத் திட்டமிட்டிருந்தார்.
அதே போல கல்பாக்கம் செல்லும் முன் நாளை காலை கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப்பேசவும் முடிவு செய்திருந்தார். அப்போது பிரதமருக்கு விருந்தளிக்கவும் கருணாநிதி திட்டமிட்டிருந்தார்.
பிரதமராக பதவியேற்ற பின் மன்மோகன் சிங் முதன் முறையாக தமிழகம் வர இருந்ததால் காங்கிரஸ் கட்சியினரும்தடபுடல் ஏற்பாடுகளில் இறங்கினர்.
இந் நிலையில் வைரஸ் காய்ச்சலால் மன்மோகன் சிங் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இரு நாட்கள் அவர் முழுஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் இரு நாட்களுக்கு அவரதுஅனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதில் சென்னை பயணமும் அடக்கம்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications