ஆயுத இறக்குமதி: 4வது இடத்தில் இந்தியா
வாஷிங்டன்:
ஆசியாவிலேயே மிகப் பெரும் அளவில் ஆயுதங்கள் குவிக்கும் நாடுகள் வரிசையில் இந்தியாநாலாவது இடத்தைப் பிடித்துள்ளது.
சீனா, இந்தியா, பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதி வளைகுடா நாடுகளைத் தூக்கிச்சாப்பிட்டுவிட்டது. அதே நேரத்தில் உலகளவில் ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதில் மூன்றாவதுஆண்டாக தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளது.
2002ம் ஆண்டில் உலகளவில் 29.14 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத விற்பனை நடந்தது.2003ல் இது 12 சதவீதம் குறைந்து 25.6 பில்லியன் டாலராகியது. இந்த ஆண்டு இந்த விற்பனைமேலும் குறைந்துள்ளது.
கங்கிரசனல் ரிசர்ச் குரூப் என்ற சர்வதேச பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்ள்ளன. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
வளர்ச்சியடைந்த நாடுகள் புதிய ஆயுதங்கள் வாங்குவதைத் தவிர்த்துவிட்டு, இருக்கும்ஆயுதங்களை நவீனப்படுத்தவும் மேம்படுத்தவும் ஆரம்பித்துவிட்டன. மேலும் பல நாடுகள்ஆயுதங்கள் மீதான செலவைக் கட்டுப்படுத்தி விட்டன. சில வளர்ச்சியடைந்த நாடுகளில் நிலவும்பொருளாதார மந்தம் காரணமாக ஆயுதங்களில் செலவிட பணமில்லை.
ஆனால், வழக்கம்போல் வளரும் நாடுகள் ஆயுதக் குவிப்பை நிறுத்தவில்லை.
ஆயுத விற்பனையில் அமெரிக்காவும் ரஷ்யாவும் தான் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.கடந்த ஆண்டில் அமெரிக்கா 14.5 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத ஏற்றுமதி செய்துள்ளது.ரஷ்யா 4.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை ஏற்றுமதி செய்துளளது.
மூன்றாவது இடத்தில் ஜெர்மனி உள்ளது. இந்த நாடு 1.4 பில்லியன் டாலர் ஆயுதங்களை ஏற்றுமதிசெய்துள்ளது.
வளரும் நாடுகளைப் பொறுத்தவரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடந்த 7 ஆண்டுகளில் 15.7பில்லியன் டாலருக்கு ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ளது. சீனா 13.7 பில்லியனுக்கும், எகிப்து13.6 பில்லியனுக்கும் ஆயுதங்களை வாங்கிக் குவித்துள்ளன.
12.6 பில்லியனுக்கு ஆயுதங்கள் வாங்கி இந்தியா நாலாவது இடத்திலும், 3.8 பில்லியன் மதிப்புள்ளஆயுதங்களை இறக்குமதி செய்து பாகிஸ்தான் 10வது இடத்திலும் உள்ளன.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications