இராக்: 3 இந்திய பிணை கைதிகள் விடுதலை
துபாய்:
இராக்கில் தீவிரவாதிகளிடம் பிணைக் கைதிகளாக இருந்த 3 இந்தியர்களும்விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இத் தகவலை முதலில் அல்-அரேபியா தொலைக் காட்சி தெரிவித்தது. பின்னர் வெளியுறவுத்துறைஅமைச்சர் நட்வர் சிங்கும் இத் தகவலை உறுதி செய்தார். அவர்கள் இராக்கில் உள்ள இந்தியத்தூதரகத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.
குவைத் வழியாக அவர்கள் இந்தியா அழைத்து வரப்படவுள்ளனர்.
இந்தியர்களோடு பிடித்துச் செல்லப்பட்ட 3 கென்யர்களும், ஒரு எகிப்திய லாரி டிரைவரும்விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இராக்கில் லாரி ஓட்டிச் சென்ற அந்தர்யாமி, திலக்ராஜ், சுக்தேவ் சிங் ஆகிய மூன்று இந்தியடிரைவர்களையும் மூன்று கென்யர்களையும் ஒரு எகிப்தியரையும் தீவிரவாதிகள் கடந்த ஜூலை 21ம்தேதி கடத்திச் சென்றனர்.
இதையடுத்து குவைத் கல்ப் போக்குவரத்து நிறுவனமும் மத்திய அரசும் தீவிரவாதிகள் அமர்த்தியமத்தியஸ்தரான துலாய்மி மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
ஆனால், பண பேரம் காரணமாக பேச்சுவார்த்தையில் உடனடி முன்னேற்றம் ஏற்படவில்லை.இதையடுத்து பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகிக் கொண்ட அந்த நிறுவனம், நேரடியாகவோஅல்லது துலாய்மி தவிர்த்த வேறு தூதர் மூலமோ தான் தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்துவோம் என்றுகூறிவிட்டது.
இந் நிலையில் இராக்கில் இருந்து அந்த லாரி நிறுவனம் வெளியேற வேண்டும், அமெரிக்கப்படைகளுக்கு உணவு சப்ளையில் இந் நிறுவன லாரிகள் ஈடுபடக் கூடாது, இந்த நிபந்தனையைஏற்றால் கடத்தப்பட்ட 7 பேரையும் உடனே விடுவிப்போம் என தீவிரவாதிகள் அறிவித்தனர்.
இதை குவைத் நிறுவனம் ஏற்றுக் கொண்டு இராக்கில் இருந்து தனது லாரிகள் அனைத்தையும் திரும்பஅழைத்தது. இந் நிலையில் 3 இந்தியர்களும், 3 கென்யர்களும், ஒரு எகிப்தியரும்விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தைச் சேர்ந்த 12 தொழிலாளர்களை இராக்கிய தீவிரவாதிகள் நேற்று கொலை செய்ததால்அந் நாட்டில் பெரும் கலவரம் நடந்து வரும் நிலையில், இந்தியர்கள் இன்றுவிடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே ஒரு முறை3 இந்தியர்கள் உள்பட 7 பேரும் விடுவிக்கப்பட்டதாக செய்தி வெளியாகிபின்னர் அது தவறானது நினைவுகூறத்தக்கது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications