மாலத்தீவு சிறையில் வாடும் தமிழர்
சென்னை:
மாலத் தீவு சிறையில் வாடிக் கொண்டிருக்கும் கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞர் தன்னைக் காப்பாற்றநடவடிக்கை எடுக்கக் கோரி குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வலுக்கன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். மாலத்தீவில் வேலை பார்த்து வந்த இவர் கற்பழிப்பு மற்றும் கொலை ஆகிய புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தான் குற்றமற்றவன், அப்பாவி, பொய்யான புகாரின் பேரில் தன்னை சிறையில் அடைத்துள்ளார்கள் என்று கூறிகுடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு தனது உறவினர் எமில் ஜெபசிங் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார் ராஜன்.
இக் கடிதத்தை கலாமுக்கு அனுப்ப உதவிய திண்டுக்கல்லைச் சேர்ந்த அமைதி அறக்கட்டளை தலைவர் பால் பாஸ்கர்கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக ராஜன் சிறையில் வாடி வருகிறார். இவருடன் சேர்த்து தமிழகத்தைச் சேர்ந்தகமல், சரவணன் ஆகியோரையும் சிறையில் அடைத்தனர்.
இதில் சரவணன் சிறை அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்பட்டு விட்டார். தற்போது ராஜனும், கமலும் சிறையில்வாடி வருகிறார்கள். இவர்களை மீட்காவிட்டால் சரவணனுக்கு நேர்ந்த கதிதான் இருவருக்கும் ஏற்படும்.
இருவரையும் பொய் வழக்கில் கைது செய்துள்ளனர் அந் நாட்டுப் போலீசார். அப்படியே குற்றம் செய்திருந்தாலும்முறைப்படி நீதிமன்றத்தில் விசாரணை நடத்தலாம். அதுவும் நடத்தப்படவில்லை. விசாரணையே இல்லாமல்சிறையில் வதைக்கப்பட்டு வருகின்றனர் என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications